உடல் சோர்வு இருக்கா? உடனடி எனர்ஜி கொடுக்கும் இந்த டிரிங்க்; இப்படி ரெடி பண்ணுங்க: டாக்டர் மைதிலி டிப்ஸ்
நமது உடலில் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்போது அதை சரி செய்வது மட்டுமல்லாமல், உடலில் உடனாடியாக எனர்ஜி ஸ்டாமினா இரண்டையும் அதிகப்படுத்தும் வகையில், முக்கியமான ஒரு நேச்சுரல் ட்ரிங் இருக்கிறது.
நமது உடலில் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்போது அதை சரி செய்வது மட்டுமல்லாமல், உடலில் உடனாடியாக எனர்ஜி ஸ்டாமினா இரண்டையும் அதிகப்படுத்தும் வகையில், முக்கியமான ஒரு நேச்சுரல் ட்ரிங் இருக்கிறது.
உடல் சோர்வாக இருக்கும்போது நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால் இந்த ட்ரிங்கை குடித்தால், உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார். அது என்ன என்று பார்ப்போம்.
Advertisment
நமது உடலில் உடல் சோர்வு அதிகமாக இருக்கும்போது அதை சரி செய்வது மட்டுமல்லாமல், உடலில் உடனாடியாக எனர்ஜி ஸ்டாமினா இரண்டையும் அதிகப்படுத்தும் வகையில், முக்கியமான ஒரு நேச்சுரல் ட்ரிங் இருக்கிறது. இது இயற்கை ஓ.ஆர்.எஸ் என்று கூட சொல்லலாம். உடல் சோர்வு அதிகம் இருக்கிறது என்றால், பலரும் கடைகளில் ஓ.ஆர்.எஸ் அல்லது குளுக்கோஸ் வாங்கி தண்ணீரில் கரைத்து குடித்துவிடுவார்கள்.
அந்த மாதிரி செய்யாமல் கோடைகாலத்தில் உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது, அல்லது நார்மலாக இருக்கும்போதே உடல் சோர்வாக இருக்கிறது என்றால், இயற்கையாக இந்த ட்ரிங்கை வீ்ட்டில் செய்து குடித்தால், உடனடி எனர்ஜி கிடைப்பதோடு மட்டுமல்லாமல், எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி வர மாதிரி இருக்கு என்றாலும், இந்த எனர்ஜி ட்ரிங்கை தயார் செய்து குடிக்கலாம்.
30 கிராம் அளவுக்கு ஃபார்சுடு பேரி எடுத்துக்கொண்டு, 400 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீரில் இது கொதிக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை நிறதத்திற்கு மாறி வரும். இது வேகும்போது ஒரு கரண்டி அல்லது ஸ்பூன் வைத்து நசுக்கிவிட வேண்டும். இந்த 400 மில்லி தண்ணீர் நன்றாக கொதித்து ஒரு க்ளாஸ் அளவு வரும்போது. எடுத்து வடிகட்டி, வெதுவெதுப்பாக இருக்கும்போதே அதில் சுக்குப்பொடி 3 சிட்டிகை அளவுக்கு சேர்க்க வேண்டும்.
Advertisment
Advertisements
கூடவே ஒரு சிட்டிகை இந்துப்பு சேர்த்து, நன்றாக கலக்கிவிட்டு குடித்துவிட வேண்டும். காலை நேரத்தில் குடிப்பது நல்லது. உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது என்றால் மாலையிலும் குடிக்கலாம். காலை நேரத்தில் குடிக்கும்போது இதன் நன்மைகள் அதிகம் இருக்கும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.