இந்த 2 வகை மீன்களை விடாதீங்க... 100 கிராம் மீனில் 300 மி. கிராம் கால்சியம்: டாக்டர் பால சுப்ரமணியன்
சிறுவர்களுக்கு 500 மில்லிகிராம், 15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராம், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1500 மில்லி கிராம் கால்சியம் சத்து தேவை
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு அவசியம். உணவின் மூலம் மட்டும் தான் உடலை ஆரோக்கியமான வைத்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக எந்தெந்த பாகத்திற்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்று தெரிந்துகொண்டு அந்த சத்துக்கள் அடங்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அந்த வகையில் எலும்பு ஆரோக்கியத்திற்கு என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Advertisment
பொதுவாக கால்சியம் சத்து தான் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானது என்ற கருத்து இருக்கிறது. அது உண்மை தான் என்றாலும் கூட, எலும்பு ஆரோக்கியத்திற்கு, வைட்டமின் டி3, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் அவசியமாகும். இதில் வைட்டமின் டி3 என்பது சூரிய ஒளியில் மட்டும் தாக் கிடைக்கும். வயதானவர்களுக்கு இது சாத்தியமில்லை என்பதால் வைட்டமின் டி3 மத்திரையை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் வைட்டமின் சி எலுமிச்சை, மற்றும் நெல்லிக்காயில் கிடைக்கும். அதேபோல் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருக்கும் வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதை விட மிகவும் முக்கியமானவது புரதச்சத்து. இந்த சத்து இருந்தால் மட்டும் தான் எலும்பு வளர்ச்சியடைந்து சரியான ஆரோக்கியத்துடன் இருக்கும். எலும்புகளை இயக்குவது சதை. அந்த சதைகளை இயக்குவது நரம்புகள். இவை மூன்றையும் இயக்குவது இதயம். இவை அனைத்திலும் கால்சியம் சத்து இருக்கிறது.
உடலில் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கும் சக்தி கால்சியத்திற்கு உண்டு. உடலில் சிறிது காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்தால், அந்த இடத்தை அழுத்தி பிடிக்கும்போது ரத்தம் உறைதல் ஏற்பட்டு ரத்தம் வருவது சிறிது நேரத்தில் நின்றுவிடும். இந்த செயல்முறை நடைபெறுவதற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். சிறுவர்களுக்கு 500 மில்லிகிராம், 15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 1000 மில்லி கிராம், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலுட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு 1500 மில்லி கிராம் ஒரு நாளைக்கு சராசரியாக கால்சியம் சத்து தேவை.
Advertisment
Advertisements
பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. 100 எம்.எல். பால் பொருளில் 125 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. அதேபோல் வேகவைத்த ஒரு முட்டையில் 25 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது, ஒருநாளைக்கு 3-4 வேகவைத்த முட்டை எடுத்துக்கொள்ளலாம். அடுத்து மீன் எடுத்துக்கொள்ளலாம். 100 கிராம் மீனில் 300 மி.கி. கால்சியம் சத்து உள்ளது, முக்கியமாக சாலமன் மற்றும் மத்தி மீனை எடுத்துக்கொள்வது கால்சியம் சத்து கிடைக்க அதிக பலன் தரும். அதன்பிறகு காய்கறிகள் மற்றும் கீரைவகைகளில் கால்சியம் சத்துக்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.