தினமும் காலை – இரவு இந்த வடகம் சாப்பிடுங்க…மலச்சிக்கல் தீரும்; டாக்டர் நித்யா
உணவில் ஃபைபர் இல்லாமல், முழுக்க முழுக்க மாவுச்சத்து இருந்தால், இப்படி மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். இதனால் மலம் குடல் பகுதியில் தேங்க தொடங்கிவிடும்.
உணவில் ஃபைபர் இல்லாமல், முழுக்க முழுக்க மாவுச்சத்து இருந்தால், இப்படி மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். இதனால் மலம் குடல் பகுதியில் தேங்க தொடங்கிவிடும்.
மலம் கழிப்பதில் சிரமம் அல்லது மலம் கழிக்கும் எண்ணிக்கை குறைதல் மலச்சிக்கல் பிரச்னையாக கூறப்படுகிறது. பொதுவாக, ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கலாகக் கருதப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கு, இயற்கையில் பல தீர்கள் உள்ளன.
Advertisment
இது குறித்து டாக்டர் நித்யா தனது வீடியோ பதிவில், காலை எழுந்தவுடன் மலம் கழிக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒரு நிகழ்வு. அப்படி கழிக்க முடியவில்லை என்றால் அவை மலச்சிக்கலாக கருதப்படும். இந்த பிரச்னையை தீர்க்க, பல வழிகள் இருக்கிறது. நம் சாப்பிடும் உணவில் ஃபைபர் இல்லாமல், முழுக்க முழுக்க மாவுச்சத்து இருந்தால், இப்படி மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். இதனால் மலம் குடல் பகுதியில் தேங்க தொடங்கிவிடும்.
மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், உடலில் அதிகமாக முகப்பருக்கள் இருக்கும். குறிப்பாக, நெற்றி பகுதியில் முகப்பருக்கள் இருக்கும். இந்த முகப்பருக்கள் நாளடைவில் தழும்புகளாக மாறக்கூடும். அதேபோல் கன்னங்களில் முகப்பரு, உடலில் சருமம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதற்கு, இந்த மலச்சிக்கல் பிரச்னை தான் காரணமாக இருக்கிறது. அதேபோல் சருத்தில், நீர்தன்மை இல்லாத நிலை இருக்கும். செரிமான பிரச்னை ஏற்படும். வயிறு உப்பசமாக இருக்கும்.
அடுத்து பேசும்போது வாயில் இருந்து துர்நாற்றம் வீசுவது, போன்ற அறிகுறிகள் தென்படும். மூட்டுவலி, குதிகால் வலி, பித்தப்பை கற்கள், சிறுநீரகத்தில் கற்கள், அதிகமாக அசிடிட்டி உருவாக வாய்ப்புகள் உள்ளது. இந்த மலச்சிக்கல் பிரச்னையை தீர்க்க, அதிகமான ஃபைபர் கண்ட்ன்ட் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலில் முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம்.
Advertisment
Advertisements
அதேபோல் நார்ச்சத்து அதிகம் இருக்கும காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நார்ச்சத்து உணவுகளில் பிரண்டை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரச்னையை தீர்க்க பிரண்டை வடகத்தை எடுத்துக்கொள்ளலாம். வடகம் என்றாலே மாத்திரை மாதிரிதான். ஓமம், சீரகம், மிளகு, அதிமதுரம், அக்ரகாரம், உள்ளிட்ட பொருட்களை சேர்த்து அரைத்து அதனுடன் இந்துப்பை சேர்த்து, அரைத்து செய்யக்கூடியது தான் பிரண்டை வடகம். இந்த வடகத்தை காலை மாலை என தினமும் இரு வேளை எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்னை தீரும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.