/indian-express-tamil/media/media_files/SdPRIhGwu3w0o1CFfH5K.jpg)
இன்றைய காலக்கட்டத்தில், உணவு பழக்கம் மாறி வருவதன் காரணமாக பலரும் பலவிதமாக நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நோய்களுக்கு முக்கிய புள்ளியாக இருப்பது மலச்சிக்கல். இந்த பிரச்னை எதனால் வருகிறது? மலச்சிக்கல் என்றால் என்ன? இதனை சரி செய்வது எப்படி என்பது குறித்து டாக்டர் பொற்கொடி கூறியுள்ளார்.
காலையில் எழுந்து மலம் கழிக்க சிரமப்படுவது, வலியுடன் கூடிய மலம் கழிப்பது தான் மலச்சிக்கல் என்று சொல்வார்கள். அதேபோல் மலம் இருக்கமாக இருக்கும். நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் மலச்சிக்கல் பிரச்னை வரும்.
உடல் உழைப்பே இல்லாமல் இருப்பது மலச்சிக்கல் பிரச்னை வர முக்கிய காரணமாக இருக்கிறது. சில மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் காரணமாகவும், மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹார்மோன்கள் இன்பேலன்ஸ் ஆகும்போது உடலில் செரிமான தன்மை குறைந்துவிடும். இதன் காரணமாகவும் மலச்சிக்கல் வரும். மெக்னீசியம் சத்து குறைபாடு, அயர்ன் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருப்பது, வயது முதிர்ச்சி காரணமாக மெட்டபாலிசம் குறைகிறது. இதன் காரணமாகவும் மலச்சிக்கல் வரலாம்.
நமது உடலுக்கு ஒரு நாளைக்கு 25-30 கிராம் நார்ச்சத்து தேவை. இந்த நார்ச்சத்து பழங்கள், மற்றும் காய்கறிகள் மூலமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பப்பாளி, வாழை, அத்தி, உலர் திராட்சை போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம். சுரைக்காய், புடலங்காய், முருங்கை கீரை, பசலைக்கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆகிய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சியாவதை, வால்நட், பாதாம், சூரியகாந்தி விதை, பூசனி விதை போன்ற வதைகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதன் காரணமாக, மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டுவிட்டு, ஒரு டம்பளர் வெந்நீரையை குடிக்கலாம். இரவு படுக்க செல்லும் முன், ஒரு ஸ்பூன் நெய் பாலில் கலக்கி குடிககலாம். சித்த மருத்துவத்தில் இருக்கும் திரிபலா சூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தாண்டிக்காய்) 5 கிராம் அளவில் எடுத்து தினமும் இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வரலாம். இந்த பொடியை ஒரு ஸ்பூன் நெய்யில் வதக்கியும் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.