/indian-express-tamil/media/media_files/2025/01/29/56LU8C8EzWRcsTbypWSi.jpg)
மலம் கழிப்பதில் சிரமம் அல்லது மலம் கழிக்கும் எண்ணிக்கை குறைதல் மலச்சிக்கல் பிரச்னையாக கூறப்படுகிறது. பொதுவாக, ஒரு வாரத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பது மலச்சிக்கலாகக் கருதப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்னைக்கு, இயற்கையில் பல தீர்கள் உள்ளன.
இது குறித்து டாக்டர் நித்யா தனது வீடியோ பதிவில், காலை எழுந்தவுடன் மலம் கழிக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒரு நிகழ்வு. அப்படி கழிக்க முடியவில்லை என்றால் அவை மலச்சிக்கலாக கருதப்படும். இந்த பிரச்னையை தீர்க்க, பல வழிகள் இருக்கிறது. நம் சாப்பிடும் உணவில் ஃபைபர் இல்லாமல், முழுக்க முழுக்க மாவுச்சத்து இருந்தால், இப்படி மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும். இதனால் மலம் குடல் பகுதியில் தேங்க தொடங்கிவிடும்.
இந்த மாதிரி சமயங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டால் மலம் கழப்பது எளிமையாக மாறிவிடும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் இந்த மாதிரி மலச்சிக்கல் பிரச்னை வர கூடும். அதேபோல் வயிற்றை சுத்தம் செய்ய 6 அல்லது 5 மாதத்திற்கு ஒருமுறை வயிற்றுப்போக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதேபோல் தினமும் காலையில் உலர் திராட்சை மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
உலர் திராட்சை, மற்றும் அத்திப்பழத்தில், ஃபைபர் கண்டன்ட் அதிகம் இருப்பதால், குடல் பகுதியில் இயக்கத்தை அதிகரிக்கும். மாதுளை அதிக சத்துக்கள் நிறைந்தது. அதன் தோலை கசாயம் வைத்து சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். ஆசனவாய் பிரச்னைகளுக்கு, வாழைப்பூ, மற்றும் மாதுளை தோல் தீர்வு தரும். இந்த மாதுளை தோலை தொடர்ந்து 5 நாட்கள் கசாயம் வைத்து குடித்தால், மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வக அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.