நைட் சாப்பிடும் முன் இந்த 3 தப்பை செய்யாதீங்க... சுகர் எகிறும் அபாயம் இருக்கு: டாக்டர் பிரபாகர் ராஜ்
உடலின் ரத்த சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது சர்க்கரை நோய் என்று சொல்வார்கள். இது அதிகமாக இருந்தால் ஹைசுகர் என்றும், குறைவாக இருந்தால் லோசுகர் என்றும் சொல்வார்கள்.
உடலின் ரத்த சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது சர்க்கரை நோய் என்று சொல்வார்கள். இது அதிகமாக இருந்தால் ஹைசுகர் என்றும், குறைவாக இருந்தால் லோசுகர் என்றும் சொல்வார்கள்.
உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒரு நாள்பட்ட பிரச்னை தான் சர்க்கரை வியாதி. கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதது இதற்குக் காரணம். உடலின் ரத்த சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது சர்க்கரை நோய் என்று சொல்வார்கள். இது அதிகமாக இருந்தால் ஹைசுகர் என்றும், குறைவாக இருந்தால் லோசுகர் என்றும் சொல்வார்கள்.
Advertisment
ஒருமுறை சர்க்கரை வியாதி என்று வந்துவிட்டால் அவர்கள் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்க வேண்டும். அந்த வகையில் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் இரவில் எ்பபடி சாப்பிட வேண்டும் என்பது குறித்து, டாக்டர் பிரபாகர் ராஜ் கூறியுள்ளார்.
இரவில் சாப்பிடும்போது 3 தவறுகளை செய்யக்கூடாது. இதில் முதலில் இருப்பது பழங்கள். இரவில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காலை மதியம் அல்லது மாலை இந்த 3 வேளை தான் பழங்கள் சாப்பிட ஏற்ற வேளை. பழங்களில் அதிகப்படியான சர்க்கரை இருப்பதால் அதனை தவிர்ப்பது நல்லது. ஆனாலும் இரவில் பழங்களை சாப்பிடும்போது, தூக்கத்தை தொந்தரவு செய்வதோடு மட்டுமல்லாமல், சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
கார்போஹைட்ரெட் அதிகம் உள்ள, பாஸ்தா, நூடல்ஸ், சாதம், இட்லஜி, தோசை, ஆகியவற்றில் கார்போஹைட்ரெட் அதிகம் இருப்பதால், இது உடல் ரதத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. இது சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான நபர்களுக்கு ஆபத்து. இதனால் இரவில் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 3-வது சாப்பிடுவதற்கும் தூங்குவதற்குமான இடைவெளி 2.30 மணி நேரம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.