எக்குத்தப்பாக சுகர் ஏறி விட்டதா? தடதடவென குறைக்க இந்த ஒரு கை மருந்து: டாக்டர் நித்யா ரெமடி
சர்க்கரை நோயாளிகள் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
Advertisment
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், ஆப்பிள் கூட உடல் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். அதேபோல் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் காயங்கள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
உடலில் அதிகப்படியான சர்க்கரையின் அளவு இருந்தால், இவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, சுகர்ப்ரி மாத்திரி எடுத்துக்கொண்டேன், அதனால் சர்க்கரை பண்டங்கள் இல்லாமல், தேன், நாட்டு சர்க்கரை உடலுக்கு நல்லது தானே என்று எடுத்துக்கொள்ள கூடாது. சர்க்கரை நோய் என்பது உடலில் இனிப்பு அளவு அதிகரிப்பு தான். அதனால் இனிப்பான எந்த பொருளையும் தவிர்த்துவிட வேண்டும். அதே சமயம், உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவர தேவையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisement
அந்த வகையில், சீந்தல் மற்றும் மலைவேப்பு இவற்றை கர்ப்ப முறைப்படி சேர்த்து மருந்தாக கொடுத்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும். குறிப்பாக இந்த கலவையை வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளும்போது உடலில் சர்க்கரையின் அளவு 300-400 இருந்தாலும் உடனடியாக குறையும். சிறுநீரக கோளாறு மற்றும் நரம்பு பாதிப்புகள் இருந்தால் அதில் இருந்து மீண்டு வரலாம். இன்னொரு முக்கியமான வைத்தியம் தான் மஞ்சள். கொம்பு மஞ்சளை வாங்கி வீட்டிலேயே காயவைத்து பவுடர் செய்து வைத்துக்கொள்ளவும்.
இந்த கொம்பு மஞ்சள் பொடியை கருந்துளசி சாரை சேர்த்து கலந்து வெளியில் காய வைத்து எடுத்து, இதை மிக்ஸியில் போட்டு அறைத்து அந்த பவுடரை, ஒரு நாளைக்கு அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீரில் கலந்து காலை உணவுக்கு முன்பும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். இதை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்தால், உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.