கண் அடிக்கடி துடிக்குதா? இந்தச் சத்து குறைபாடாக இருக்கலாம்; எச்சரிக்கும் டாக்டர் பொற்கொடி
உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உணவின் மூலமாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். உணவுமுறையை மாற்றினால் எந்த ஒரு சத்து குறைபாடும் உடலில் ஏற்படாது.
உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உணவின் மூலமாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். உணவுமுறையை மாற்றினால் எந்த ஒரு சத்து குறைபாடும் உடலில் ஏற்படாது.
கண்கள் அடிக்கடி துடிப்பது, உடல் மிகவும் பலவீனமாக உள்ளது போன்ற உணர்வுகள் இருந்தால், கணடிப்பாக உங்கள் உடலில் ஏதேனும் சத்து குறைப்பாடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. முதலில் உடலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை உணவின் மூலமாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். உணவுமுறையை மாற்றினால் எந்த ஒரு சத்து குறைபாடும் உடலில் ஏற்படாது. உடலுக்கு எவ்வித பிரச்னையும் வராது. ஆரோக்கியமாக இருக்கலாம்.
Advertisment
உங்களுக்கு கண்கள் அடிக்கடி துடிப்பது, இதய துடிப்பு சீராக இல்லாது, மலச்சிக்கல், தூக்கமின்மை, இந்த மாதிரியாக அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடலில் மெக்னீசியம் சத்து குறைவாக இருக்கிறது என்ற எடுத்துக்கொள்ளலாம். நமது உடலில் ஏற்படும் என்சைமாட்ரிக் ஆக்ஷனுக்கு மெக்னீசியம் சத்து மிக அவசியமானது. உடலில் எனர்ஜி உருவாகவும், புரோட்டின் அதிகரிக்கவும், டிஎன்ஏ ஆரோக்கியம், மூளை வளர்ச்சிக்கு எலும்பு ஆரோக்கிம் மெக்னீசியம் சத்து மிக அவசியம்.
ரத்த சர்க்கரை அளவை கண்ட்ரோல் செய்வது, ரத்த அழுத்தத்தை சீரமைக்கவும் மெக்னீசியம் சத்து மிக முக்கியமானது. இந்த சத்து குறைபாடு ஏற்படும்போது உடலில் பல அறிகுறிகள் தோன்றும். உடலில் மெக்னீசியம் சத்து 60 சதவீதம் நமது எலும்புகளில் தான் இருக்கும். 20 சதவீதம், தசைகளிலும், 19 சதவீதம், திசுக்களிலும் இருக்கும். மீதமுள்ள ஒரு சதவீதம் உடலில் எந்த உறுப்புகளிலும் இருக்கும். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம், பெண்களுக்கு 310-320 மில்லிகிராம் மெக்னீசியம் சத்து தேவை.
மெக்னீசியம் சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது, வெண்மையாக உள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது தான் உடலில் மெக்னீசியம் குறைபாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது மெக்னீசியம் குறைபாட்டுக்கு வழி வகுக்கும். ஆல்கஹால் அதிகம் எடுத்துக்கொண்டாலும் மெக்னீசியம் சத்து குறைபாடு ஏற்படும். உடலில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அதை உணவின் மூலமாக சரி செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
அந்த வகையில் மெக்னீசியம் சத்து அதிகம் பெறுவதற்கு, பூசணி விதை, சியாவிதை, பாதாம் முந்திரி, பசலைக்கீரை, டார்க் சாக்லேட், ஓட்ஸ், வாழைப்பழம், உள்ளிடட உணவு பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பூசணி விதை, சியா விதை, முந்திரி பாதாம் இவை அனைத்தையும் ஊறவைத்துவிட்டு, மிக்ஸ்ஷேக் மாதிரி அடித்து, அதனுடன் ஓட்ஸ் கலந்து குடிக்கலாம் என்று டாக்டர் பொற்கொடி கூறியுள்ளார்.