கல்லீரல் கொழுப்பு? காலையில் இந்த கஞ்சி தான் பெஸ்ட்: டாக்டர் ராஜலட்சுமி
கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பு இளைஞர்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பு இளைஞர்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும்.
மனித உடலில் கொழுப்புச்சத்து முக்கியமான ஒன்றாக இருந்தாலும், நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என 2 வகைகள் உள்ளன. உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், உடலுக்கு பாதிப்பு ஏற்படும். அதே சமயமத்தில் குறைவாக இருந்தாலும் பாதிப்பு இருக்கும். இதனால் எந்த சத்தாக இருந்தாலும், சமநிலையாக இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Advertisment
அந்த வகையில் உடலுக்கு தேவையான சத்துக்களில் கொழுப்பு சத்தும் ஒன்று. அதுவே கொழுப்பு அதிகமாகானால்உடலில் பல பாகங்களில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் மற்ற நோய்களின் தாக்கமும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில், கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பு இளைஞர்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, உடலில் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும்.
உடலில் மெட்டபாலிசம், செரிமானத்திற்கான வழி, ஹார்மோன்களை ரீ-சைக்கிள் செய்வது, போன்ற பல்வேறு செயல்களை செய்கிறது. மற்ற உறுப்புகளை கட்டி ஆளக்கூடிய உறுப்புதான் கல்லீரல் என்று சொல்வார்கள். கல்லீரல் பாதிப்பு ஏற்படும்போது செரிமானத்தை சீராக்காமல் உடலில் கொழுப்பை அதிகப்படுத்தி, கொழுப்புகளை தன்மீது படர அனுமதித்துக்கொள்ளும். இந்த நிலை ஏற்படும்போது கல்லீரல் செயல் திறன் குறையும்.
Advertisment
Advertisements
இதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டி, மார்பக கட்டி உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். மேலும் சுகர், தைராய்டு, ரத்த கொதிப்பு, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். இந்த கல்லீரலை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்க, உடலில் பித்த நீர் சரியாக சுரக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் தூக்கம் அவசியம். அதேபோல் இந்த கொழுப்பு கல்லீரல் பாதிப்பு இருப்பவர்கள் காலை உணவாக பார்லி கஞ்சி சாப்பிடுவது நல்லது.
தினமும் காலையில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், வெள்ளரி பிஞ்சு, சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு குறையும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்