பி.பி இருக்கா? இரவில் தூங்கும் முன்பு நீர்த்த பாலில் இந்தப் பொடி சேர்த்து குடிங்க; வேற லெவல் ரிசல்ட்!
ரத்த கொதிப்பு மற்றும் ரத்த கொழுப்பு இவை இரண்டும் சகோரிகள் போல. இது இருந்தால் அது இருக்கும். அது இருந்தால் இது இருக்கும். இதனால் எண்ணெய் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் சநதிக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று ரத்தக்கொதிப்பு, இந்த பாதிப்பு உடலில் இருக்கிறது என்று உறுதியானால் உணவில் கட்டப்பாடுகள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ரத்தக்கொதிப்பு பாதிப்பு இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
மிகவும் முக்கியமான விஷயம் ரத்த கொதிப்பு பாதிப்பு இருந்தால் உப்பு ஆகவே ஆகாது. உணவில் உப்பு அதிகம் சாப்பிட்டால் ரத்தகொதிப்பு அதிகரித்துக்கொண்டே போகும். உடலில் ரத்த கொதிப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிந்தாலே உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். உப்பு அதிகம் சேர்த்த உணவுகள், உப்பு கலந்த மோர் சாப்பிடுவது, உப்பு தூவிய உருளைக்கிழங்கு சாப்பிடுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
ரத்த கொதிப்பு மற்றும் ரத்த கொழுப்பு இவை இரண்டும் சகோரிகள் போல. இது இருந்தால் அது இருக்கும். அது இருந்தால் இது இருக்கும். இதனால் எண்ணெய் பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ரத்த கொழுப்பு, ரத்த கொதிப்பு அதிகம் இருந்தால், சிறுநீரகம் சரியாக வேலை செய்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். சிறுநீரகம் உப்பை சரியாக பிரித்து எடுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது அவசியம்.
உடலில் ரத்த கொழுப்பு அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக புலால் உணவு ஆட்டு இறைச்சி எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நல்ல கொழுப்புகளை அதிகப்படுத்த, பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிடலாம். உடற்பயிற்சி அதிகம் இருக்க வேண்டும். குறிப்பாக அதிகமாக நடந்தாலே உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். சிறுநீரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சேர்த்தக்கொண்டாலே ரத்த் கொழுப்பு கட்டுப்படும்.
Advertisment
Advertisements
அதேபோல் தினமும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறிப்பாக காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வரை தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் சீரகத்தை வாணலில் வறுத்து, அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து அந்த சீரகம் மிதக்கும் நேரத்தில், தண்ணீர் கோல்டன் கலரில் ஆகிவிடும். அந்த தண்ணீரை வடிகட்டி, சாப்பிடும் நேரத்தில் குடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் சாதாரண தண்ணீரை குடிக்கலாம் என்று கூறியுள்ளார்.