/indian-express-tamil/media/media_files/otNcOQYhP5nrk7IgWUua.jpg)
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது தூக்கம். போதுமான அளவு தூக்கம் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். போதுமான தூக்கம் நோய் எதிர்ப்பு அமைப்பு சரியாக செயல்படவும், நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும். தூங்கும்போது நமது உடல் செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்கிறது.
தூக்கம் உடலில் ஆற்றலை சேமிக்க உதவுகிறது. பசி, வளர்ச்சி மற்றும் மனநிலை போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது, இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது. இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்த உதவுகிறது, இதனால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. தூக்கம் புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ளவும், பழைய நினைவுகளை ஒருங்கிணைக்கவும் உதவுகிறது.
நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய தேவையாக இருக்கும்போது, பலரும் இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள். இதனால் அவர்களுக்கு, பலவிதமாக நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்படி இரவில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் இந்த ஒரு டிப்ஸை செய்தால் போதும் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும் என்று டாக்டர், தீபா கூறியுள்ளார். தூக்கம் வராமல் இருப்பது ஹார்மோன்களின் இம்பேளலன்ஸ் காரணமாக நடக்கும் ஒரு விஷயம்.
சோர்வு, பகல் நேர தூக்கம், டெக்ஷன், டிப்ரஷன், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையின் காரணமாக ஒருவருக்கு தூக்கமின்மை வரலாம். பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்த்தாலே இரவில் தூக்கம் சரியாக வரும். அதேபோல் ஒரு டம்ளர் பாலில், சிறிதளவு மிளகு பொடி சேர்த்து, ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா பொடியை சேர்த்து இளம் சூட்டில் குடித்தால் அரைமணி நேரத்தில் தூக்கம் வரும் என்று டாக்டர் தீபா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.