/indian-express-tamil/media/media_files/jrsF0ksLGhNzQDmiZAl2.jpg)
உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்வது போல் இதயத்தை பாதுகாக்கவும் நாம் உணவில் இதய ஆரோக்கியத்திற்கான பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது உடலில் 24 மணி நேரமும் செயல்படும் உறுப்புதான் இதயம். இதயம் நின்றுபோனால், வாழ்க்கையே முடிந்துவிடும். அதனால் இதயத்தை பாதுகாக்க சரியான ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அவசியம்.
அதேபோல் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.சரியான உடற்பயிற்சி, சத்தான ஆகாரங்கள் இருந்தாலே உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதேபோல் உணவு சமைக்கும்போது அதில், ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை சேர்த்துக்கொள்வது நல்லது. சத்தான உணவுகளால் மட்டும் தான் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
அதே சமயம், இதயம் சரியாக ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஃபார்முலாவே போதுமானது என்று டாக்டர் ஜெகதீஷ் கூறியுள்ளார். நீங்கள் தினமும், ரன்னிங், ஜாக்கிங், மற்றும் சைக்கிளிங் செல்பவர்கள் என்றால், உங்கள் வயதை 220 எண்ணில் இருந்து கழிக்க வேண்டும். மீதி இருக்கும் நம்பரில் 85 சதவீதம் உங்கள் இதய துடிப்புடன் சரியாக இருந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்.
தினசரி ரன்னிங், ஜாக்கிங், மற்றும் சைக்கிளிங் செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். தினமும் இந்த ரேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருந்தால், உங்கள் இதயத்தின் செயல்பாடு எப்படி என்பது உங்களுக்கு தெரியும் என்று டாக்டர் ஜெகதீஷ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.