பகலில் குட்டி தூக்கம்… இந்த சிக்கல் இருக்கு; எச்சரிக்கும் டாக்டர் யோக வித்யா
பகலில் 1-2 மணி நேரம் தூங்கிவிடுவதால், இரவில் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி பகலில் குட்டி தூக்ம் போடுபவர்கள், சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் சிறிது நேரம் மந்தமாக உணரலாம்.
பகலில் 1-2 மணி நேரம் தூங்கிவிடுவதால், இரவில் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி பகலில் குட்டி தூக்ம் போடுபவர்கள், சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் சிறிது நேரம் மந்தமாக உணரலாம்.
நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியமானது. நாம் தூங்கும் போது, நம் உடல் மற்றும் மூளை ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் நேரம் கிடைக்கிறது. போதுமான தூக்கம் கிடைக்காதது பல உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.
Advertisment
அதே சமயம் இரவில் மட்டும் தான் தூங்க வேண்டும். பகலில் தூங்கினால், இரவில் தூக்கம் வராது. இரவில் தூங்கவில்லை என்றால், பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பொதுவாக, பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு 7-9 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பதின்வயதினருக்கு இன்னும் அதிக தூக்கம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தேவையான தூக்கத்தின் அளவு மாறுபடலாம், ஆனால் போதுமான தூக்கம் பெறுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது.
அதே சமயம், சிலர் பகலில் 1-2 மணி நேரம் தூங்கிவிடுவதால், இரவில் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி பகலில் குட்டி தூக்ம் போடுபவர்கள், சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் சிறிது நேரம் மந்தமாக உணரலாம். இரவில் தூக்கமே வரவில்லை. 2-3 மணி நேரம் தூங்கினாலும் உடனடியாக எழுந்துவிடுவது, அதன்பிறகு தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுவது பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை. இந்த பிரச்னையை சரி செய்ய, டாக்டர் யோகவித்யா ஒரு டிப்ஸ் கொடுத்துள்ளார்.
பகலில் தூங்கிவிட்டு, இரவில் தூங்காமல் இருந்தால், நமது உடலுக்கு தேவையான ஹார்மோன்கன்கள் சரியாக சுரக்காது. பகலில் தூங்கத்தை கண்ட்ரோல் செய்து வந்தால், இரவில் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லாம். ஆனால் பகலில் தூங்கினால், இவரில் அடிக்கடி முழிப்பு வந்துவிடும், தூக்கமின்மை பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். சூரியன் வந்தால் வெப்பம் நாம் ஆக்டீவாக இருக்க வேண்டும். நிலவு வந்தால் குளிர்ச்சி நாம் தூக்க சென்றுவிட வேண்டும். இதை மாற்றாக செயல்படும்போது நோய் அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
இரவில் சரியாக தூக்கம் வருவதற்கு, பால் பழம் எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் கசகசா, ஜாதிக்காய், சடமஞ்சிள், அமுக்கிரா இவை 4 பொருட்களையும் சேர்த்து, சம அளவில் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் இரவில் பாலில் சேர்த்து குடித்தால் தூக்கம் வரும் என்று கூறியுள்ளார்.