விந்தணுக்களை அதிகரிக்கும் இந்த சூப்பர் ஃபுட்... வேக வைத்த முட்டையுடன் இப்படி சாப்பிடுங்க: டாக்டர் யோக வித்யா
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
கணவன் மனைவி இடையே, நடக்கும் அன்பு தொடர்பான விஷயம் தாம்பத்தியம். இருவரும் ஆரோக்கியமாக இருந்தால் தான் இதில் மகிழ்ச்சியை அடைய முடியும். ஆனால் இன்றையை காலக்கட்டத்தில் ஆண்கள், விந்தணு தொடர்பான பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியமான ஆண்கள் கூட, அதிக நேரம் உறவில் நீடிக்க வயாகரா கிடைக்குமா என்று தேடும் வழக்கம் அதிகமாக உள்ளது.
Advertisment
அதே சமயம்,ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய மன அழுத்தம், புகைபிடித்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை முக்கியக் காரணங்களாக உள்ளன. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் ஆண்களின் உடலில் விந்தணு உற்பத்தியின் செயல்முறை நிற்பதில்லை. வயதுக்கு ஏற்ப ஆண்களின் விந்தணுக்களில் மரபணு மாற்றம் ஏற்படுகிறது.
இதன் விளைவாக, விந்தணு டி.என்.ஏ சேதமடையும் ஆபத்து அதிகரிக்கிறது. இதனால், ஆண்கள் தந்தையாகும் வாய்ப்பும் பல மடங்கு குறைகிறது. இருப்பினும், சில ஆயுர்வேத நடைமுறைகள் மூலம் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். அந்த வகையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர் யோகா வித்யா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
விந்தணுக்களை அதிகரிக்கவும், சீக்கிரம் குழந்தை வேண்டும் என்பவர்களும் இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ண வேண்டும். பாலை காய்ச்சிய பிறகு முருங்கைப்பூவை அதில் சேர்த்து, அத்துடன் 2 பிஞ்ச் ஜாதிக்காய் பூ சேர்த்து தொடர்ந்து 48 நாள்கள் பருகி வர வேண்டும். இதன்பிறகு, செக் செய்து பார்த்தால் விந்தணுக்கள் அதிகரித்து இருக்கும். அதேபோல், ஆலமரத்தில் இருக்கும் விழுது, பழம், கொழுந்து ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்துக் கொள்ளவும். அதனை இளைத்து பாலில் கலந்து பருகி வரலாம்.
Advertisment
Advertisements
மேலும், ஆலமர விழுது, பழம், கொழுந்து மூன்றையும் நன்கு காய வைத்து பொடியாக அரைத்து பாலில் போட்டு பருகி வரலாம். இதனை 48 நாள்கள் காலை மற்றும் இரவு பருகி வர வேண்டும். இதேபோல், ஆள் மற்றும் எடைக்கு ஏற்ப சிலாசத்து பற்பாம் 1 முதல் 3 கிராம் எடுத்து அதனை வேக வைத்த முட்டையின் நடுவில் வைத்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வரும்போது விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.