சமையலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு முக்கிய பொருள் உப்பு. இது இருந்தால் தான், உணவின் சுவையே தெரியவரும். உப்பு இல்லாத பொருள் குப்பையில் என்ற பழமொழிக்கு ஏற்ப, உணவின் சுவையை நமக்கு தெளிவாக தெரியவைப்பது உப்புதான். ஆனால் உப்பு அளவோடு இருந்தால் நல்லது. அதுவே அதிகமாக எடுத்துக்கொண்டால் அது உடல் நலத்தை பாதிப்புக்குள்ளாக்கும். இரத்த கொதிப்பு வருவதற்கு காரணம் அதிகப்படியான உப்பு சேர்ப்பது தான் என்று சொல்வார்கள்.
Advertisment
அதே சமயம் நாம் இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் உப்பு உப்பே இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒவ்வொரு உப்பும் ஒவ்வொரு வகையான ரசயனம். பொட்டாசியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் என பல ரசாயனங்கள் உப்பில் கலக்கப்படுகிறது. உப்பளங்களில் இருந்து நேரடியாக உப்பை விற்பனை செய்ய கூடாது என்ற சட்டமே வந்தது. உப்பில் அயோடின் சத்து குறைவாக இருப்பதால், அதனை சேர்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அப்போது ஒட்டுமொத்த உப்பளங்களும், பல நிறுவனங்களுக்கு உப்பை விற்றுவிட்டார்கள். அவர்கள் உப்பில், பல ப்ராசஸ் செய்து அயோடினை சேர்த்து தான் நமக்கு கொடுக்கிறார்கள். அப்படி எல்லோருக்கும் அயோடின் கலந்து உப்பு வந்திருந்தால் தைராய்டு நோய் குறைந்திருக்க வேண்டும். ஆனால் தைராய்டு பாதிப்பு இப்போது அதிகமாகியுள்ளது. இந்த அயோடின் கலந்த உப்பை சாப்பிட்டு சாப்பிட்டு, தைராய்டு சுரப்பி வேலை செய்யாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட உப்பை அயோடின் இல்லாமல் பயன்படுத்த அதனை வெயிலில் வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
வெயிலில் தாம்புலத்தில் கொட்டி வைத்தால், ஒரு மணி நேரத்தில் உப்பில் இருந்து அயோடின் ஆவியாக போய்விடும். அதன்பிறகு அந்த உபர்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.