புதிதாக பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டியது கட்டாயம். இந்த தாய்ப்பால் தான் குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதில் தாய்ப்பாலுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்திளை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக்காக தாய்ப்பால் பயன்படுகிறது.
Advertisment
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க முக்கியமான தாய்ப்பால் பயன்படுகிறது. அதேபோல் குழந்தைகளின் அறிவு வளர்ந்து புத்திசாலியாக மாறவும், தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே வலுவான உணர்ச்சிப் பிணைப்பை வளர்க்கிறது. இந்த ’தங்க திரவம்' ஆரம்பகால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரசவித்த தாய்மார்கள் அனைவருக்கும் குழந்தைக்கு தேவையான பால் சுரக்குமா என்றால் இல்லை என்று சொல்லலாம். ஆனால் பால் சுரப்பதற்கு தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டால், குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும். அதற்கு முக்கியமாக, தினமும் பசும்பால் 3 க்ளாஸ் அளவுக்கு குடிக்க வேண்டும். அதேபோல் பால் சுறா என்று இருக்கிறது. சுறா மீனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மீன் சாப்பிடும்போது 4 மணி நேரம் கழித்து பால் எடுத்துக்கொள்ளலாம்.
Advertisment
Advertisements
மீன் மற்றும் பால் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது ஒவ்வொமையை ஏற்படுத்தும். அதேபோல், செவ்வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். நேந்திரம் பழமும் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இலுப்பை இலையை இரவு மார்பகத்தில் வைத்துக்கொண்டு தூங்கினால் காலையில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும் என்று, டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.