ஆண்களுக்கு மலட்டுத்தன்மை... விதைப்பை அளவு அவ்வளவு முக்கியமா? என்ன சாப்பிடணும்?: விளக்கும் டாக்டர் யோக வித்யா
விந்தணு தொடர்பாக எந்த பிரச்சை இருந்தாலும் சரி முதலில் சரி பார்க்க வேண்டியது விதைப்பை அளவு. தற்போதைய காலத்தில் விந்தணு இல்லாத ஆண்கள் பலர் இருக்கிறார்கள்.
விந்தணு தொடர்பாக எந்த பிரச்சை இருந்தாலும் சரி முதலில் சரி பார்க்க வேண்டியது விதைப்பை அளவு. தற்போதைய காலத்தில் விந்தணு இல்லாத ஆண்கள் பலர் இருக்கிறார்கள்.
தாம்பத்தியம் என்பது கணவன் மனைவி இடையே நடக்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. இதில் இருவருமே ஆரோக்கியமாக இருந்தால் தான், மகிழ்ச்சியும் நிறைவாக இருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பல ஆண்கள், விந்து முந்துதல், உடனடியாக விந்து வெளியேறுதல், ஆண் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் விந்து முந்துதல், விந்து வெளியேறுதல் தொடர்பான பிரச்னையை எளிதில் சரி செய்யலாம்.
Advertisment
அதே சமயம் ஆண் மலட்டுத்தன்மை வந்துவிட்டால், அவர்கள் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள். இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது, இந்த பிரச்னை இருந்தால், உடலில் எந்த பாகத்தை சரி பார்க்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார். விந்தணு தொடர்பாக எந்த பிரச்சை இருந்தாலும் சரி முதலில் சரி பார்க்க வேண்டியது விதைப்பை அளவு.
தற்போதைய காலத்தில் விந்தணு இல்லாத ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல் ஆண்கள், தங்கள் ஆண்குறி சிறியதாக இருக்கிறது என்று நினைத்து நிறைய ஸ்பிரேக்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள், அதை பயன்படுத்துவதற்கு பதிலாக, தங்கள் விதைப்பையின் அளவை பார்க்க வேணடும். ஒரு சராசரி ஆணின் விதைப்பை 4-5 செ.மீ இருக்க வேண்டும். ஆனால் விந்தணு பிரச்னை, விந்தணுக்கள் கவுண்ட் கம்மியாக இருக்கிறது என்று வருபவர்களுக்கு, விதைப்பை மிகவும் சிறியதாக இருக்கும். உடல் உஷ்னம், சிறிய வயதில் இருந்து சத்தான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது, அந்த இடத்தில் அடி படுவது போன்ற பிரச்னைகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.
Advertisment
Advertisements
ஆண்கள் உடல் நலனிற்கு, ஜிங்க், ஒமேகா, வைட்டமின் சி ஆகியவை தேவையான சத்துக்கள். இதில் ஜிங்க் சத்து அதிகம் இருக்கக்கூடிய பூசணி விதைகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். வெள்ளரி விதை, சாரப்பருப்பு உள்ளிட்ட பருப்புகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஒமேகா 3-க்கு வால்நட், அல்லது வால்நட் ஆயிலை எடுத்துக்கொள்ளலாம். மீனும் ஒமேகா 3 இருக்கக்கூடிய உணவுதான் அதையும் எடுத்துக்கொள்ளலாம். நெல்லிக்காய், இஞ்சி தேன் உரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளும்போது உடலில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகரிக்கும் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.