தூக்கத்தில் விந்து வெளியேறுதா? இந்த உணவுகளை தவிர்த்திடுங்க: டாக்டர் யோக வித்யா
பொதுவாக தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சரியானது அல்ல. கைப்பழக்கம் இல்லாமல் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சராரியான ஒன்று.
பொதுவாக தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சரியானது அல்ல. கைப்பழக்கம் இல்லாமல் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சராரியான ஒன்று.
தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.
Advertisment
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது. தூக்கத்தில் விந்தணு வெளியேறுகிறது என்பது சாதாரணமாக ஒன்று அல்ல. இதை தவிர்க்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிலாம் என்பது குறித்து டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார். பொதுவாக தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சரியானது அல்ல. கைப்பழக்கம் இல்லாமல் இருந்தால் 15 நாட்களுக்கு ஒருமுறை தூக்கத்தில் விந்தணு வெளியேறுவது சராரியான ஒன்று.
அதே சமயம், ஒரு நாளைக்கு கைப்பழக்கத்தின் காரணமாக 1-2 முறை விந்தணு வெளியேற்றினாலும், தூக்கத்திலும் விந்தணு வெளியேறுகிறது என்றால் இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை. நர்வஸாக இருப்பது, உடல் வெப்பமாக இருப்பதும் இந்த பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். பாடிபில்டிங் செய்பவர்கள், நிறைய முட்டை, சிக்கன், சப்பாத்தி இதையெல்லாம் அதிக அளவில் எடுத்துக்கொள்வார்கள். இவை அனைத்துமே வெப்பத்தை கொடுக்கும் உணவுகள்.
Advertisment
Advertisements
தென்னிந்தியாவில் அதிகம் விளைவது அரிசிதான். அதனால் சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு குளிர்ச்சி. வட இந்தியாவில் தங்கள் உடலை சூடுபடுத்திக்கொள்ள சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். அப்படி எடுத்துக்கொள்ளும்பொது உடல் வெப்பம் அதிகரித்து, விந்தணு அதன் கெட்டித்தன்மையை இழந்துவிடும். இதனால் தூக்கத்தில் வெளியேறும் பிரச்னை உருவாகும். சர்க்கரை வியாதி, மற்றும் நரம்பு தளர்ச்சியினால் கூட இந்த மாதிரியான பிரச்னை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.