/indian-express-tamil/media/media_files/MLa3W5Bz3mHXl5KAqbHW.jpg)
கீரைகள் எப்போதுமே உடலுக்கு நன்மைகள் தரக்கூடியது. தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்களே கூறி வருகிறார். அதேபோல் சில கீரைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மட்டும் இல்லாமல், பாலியல் ஆரோக்கியத்திற்கும் முக்கிய தீர்வாக இருக்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் பலரும் விந்தணு குறைபாடு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், தங்கள் குறைபாடுகளை சரி செய்வதற்கு கீரைகள் முக்கிய நன்மைகளை கொடுக்கும். விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) அல்லது விந்து வெளியேறும் பிரச்சனைகள். விதைப்பையில் வீக்கம் அல்லது வலி காரணமாக வெரிகோசெல் போன்ற பிரச்சனைகளால் ஏற்படலாம். விந்து சிறுநீர்ப்பைக்குள் செல்வது அல்லது விந்து வெளியேறுவதில் சிரமம்.
இந்த மாதிரி பிரிச்னைகளை தீர்ப்பதற்கு கீரைகளையே உணவாக சாப்பிடலாம். குறிப்பாக போகம் விளைவிக்கும் கீரைகள் என்ற சொல்லப்படும் முருங்கை கீரை, தாளிக்கீரை, தூதுவளை, பசலை மற்றும் அரைக்கீரைகள் பாலியல் தொடர்பான பிரச்னைகளை நீக்கி ஆரோக்கியம் தரும். இந்த 5 கீரைகளில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்ப்பம் முறைப்படி சாப்பிடும்போது ஆண்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்.
முருங்கைக் கீரை ஆண்மைப் பெருக்கி என்றும், நரம்பு தளர்ச்சியை நீக்கும் என்றும் கூறப்படுகிறது. முருங்கைப் பூவை பாலுடன் சேர்த்து அருந்துவது ஆண்மைக்கு நல்லது என சித்த மருத்துவம் கூறுகிறது. இதில் அதிகமாக இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து நியூட்ரிஷன் சத்து எல்லாமே இந்த முருங்கை கீரையில் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
போகம் விளைவிக்கும் கீரைகளில் ஒன்றாகக் தாளிக்கீரையும் குறிப்பிடப்படுகிறது. கிராமப்புறங்களில் அதிகம் கிடைக்கும் இந்த கீரை நறுந்தாளி என்று குறிப்பிடப்படுகிறது. தினமும் கர்ப்ப முறைப்படி நெய்யில் வதக்கி இதை சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும்போது ஆண்களுக்கு விந்து முந்துதல், விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். அதேபோல் தூதுவளை கீரையும் காதல் உணர்வுகளுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. பசலைக்கீரை பாலுணர்வை தூண்டும் கீரைகளில் ஒன்று, அரைக்கீரை காம உணர்வை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்தக் கீரைகள் அனைத்தும் பொதுவாக உடலுக்கு பலம் சேர்ப்பவை, ரத்த ஓட்டத்தை சீர்படுத்துபவை மற்றும் ஹார்மோன் சமநிலைக்கு உதவும் என்பதால், இவை தாம்பத்திய உறவுக்கும் துணைபுரியும் என்று நம்பப்படுகிறது. இந்த கீரைகளை பெண்களும் எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.