விதை வீக்கம் இருக்க? அப்ப இந்த உணவுகளை இனி மிஸ் பண்ணாதீங்க: டாக்டர் யோக வித்யா
ஆண்மை தொடர்பான பிரச்னைகளில், விதைப்பை வாதம் பிரச்னை பெரும் பதற்றத்தையும், நம்மால் தாம்பத்திய வாழ்க்கையில், சரியாக செயல்பட முடியுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தும்.
ஆண்மை தொடர்பான பிரச்னைகளில், விதைப்பை வாதம் பிரச்னை பெரும் பதற்றத்தையும், நம்மால் தாம்பத்திய வாழ்க்கையில், சரியாக செயல்பட முடியுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தும்.
பொதுவாக ஆண்கள் தங்களுக்கு ஆண்மை தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டாலே அவர்களின் நிம்மதி போய்விடும். அதிலும் குறிப்பாக விந்தணு பிரச்னை ஏற்பட்டாலோ, அல்லது விதைப்பை பிரச்னை ஏற்படும்போதோ இதுதான் நமது பிரச்னை என்பதை அவர்கள் தெரிந்துகொள்வதற்கே எப்படி? யாரிடம் செல்வது என்பது குறித்து யோசிக்க தொடங்கிவிடுவார்கள்.
Advertisment
ஆண்மை தொடர்பான பிரச்னைகளில், விதைப்பை வாதம் பிரச்னை பெரும் பதற்றத்தையும், நம்மால் தாம்பத்திய வாழ்க்கையில், சரியாக செயல்பட முடியுமா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தும். அதேபோல், விதைப்பை வாதம் ஏற்படும்போது அதிகமான வலி இருக்கும். இந்த மாதிரிரி விதைப்பை வாதம் உள்ளவர்கள், தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும்.
இந்த விதைப்பை வாதம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள, வாரம் ஒருமுறை உடலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். ரோஸ் குளியல், இளநீர், மோர் குடிப்பது, நுங்கு சாப்பிடுவது, சப்ஜா விதைகள், பாதாம் பிசின் உள்ளிட்ட குளிர்ச்சியாக பொருட்களை சாப்பிட்டு வரும்போது, படிப்படியக விதைவாதம் குறையும் என்று டாக்டர், யோக வித்யா கூறியுள்ளார்.