வயதான காலக்கட்டத்தில் மூட்டுவலி என்பது பொதுவாக பலரும் சந்திக்கும் பிரச்னை. ஆனால் இன்றைய காலக்கட்த்தில், இளைஞர்கள் பலருமே மூட்டுவலியை சந்தித்து வருகின்றனர். இதற்காக பல மருந்துகள் மற்றும் மாத்திரைகளை சாப்பிட்டாலும், மூட்டுவலி என்பது பலருக்கும் தீராத பிரச்னையாகத்தான் இருக்கிறது. இந்த மூட்டுவலியை தீர்க்க, மாத்திரைகள் இல்லாமல், எண்ணெயால் தீர்க்க முடியும் என்று, சாலை ஜெயகல்பனா கூறியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மூட்டுவலிக்கு சித்த மருத்துவத்தில், உட்கொள்ளக்கூடிய மருத்துகளும் இருக்கிறது. வெளியில் தடவக்கூடிய மருந்தும் இருக்கிறது, அதேபோல், பற்று போடுவது கட்டு போடுவதும் மூட்டுவலிக்கு மருத்துவமாக இருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பின் இடுப்பு வலியை போக்க, உணமுறையில் சரி செய்யலாம். சித்த முத்திரையில் எப்படி சரி செய்யலாம் என்பதும் இருக்கிறது.
ரொம்ப சாதாரணமாக பயன்படுத்தப்படும் உளுந்து, பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை போக்குவதற்கு இதை விட சிறந்த மருந்து இல்லை என்று சொல்லலாம். கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களியை சாப்பிடலாம். குறிப்பாக தேங்காய் எண்ணெயில், செய்த உளுந்து வடையை சாப்பிட்டால், பின் இடுப்பு வலி குணமாகும். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், தினமும் முட்டை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக முட்டை பாதி வேகவைத்த நிலையில், 3-4 நாட்கள் சாப்பிட்டால் பெரிய பலன் கிடைக்கும்.
உணவில் உளுந்து, முட்டை இரண்டுமே இடுப்பு வலியை குறைக்கக்கூடியது. உடலில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் முக்கிய காரணம் வாயு தான். வாயுவை குறைக்க வாயு முத்திரையை பயன்படுத்த வேண்டும். அதேபோல் எண்ணெய் மூலமாக சரி செய்ய வேண்டும் என்றால், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த 3 எண்ணெய்களை பயன்படுத்தி மூட்டு வலியை போக்கலாம்.
Advertisment
Advertisements
இந்த மூன்று எண்ணெய்களையும் தலா 100 எம்.எல். சேர்த்து, காய்ச்சி, அதில் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து, கலந்து தடவலாம். அதேபோல் குளிர்காலமாக இருந்தால், இந்த 3 எண்ணெய்களுடன், 10 எம்.எல். வேப்ப எண்ணெய் சேர்த்து தேய்த்தால் மூட்டுவலி விரைவில் குணமாகும் என்று கூறியுள்ளார்.