வயதான காலக்கட்டத்தில் வரும் மூட்டுவலியை தற்போதைய இளைஞர்கள் தங்கள் இளம் வயதிலேயே அனுபவித்து வருகின்றனர். இந்த மூட்டுவலிக்கு தீர்வாக பலரும் ஆங்கில மருத்துவத்தை நாடி செல்கின்றனர். ஆனால் இயற்கையில் கிராமங்களில் எளிமையாக கிடைக்கும் முடக்கத்தான் கீரையை வைத்தே இந்த மூட்டுவலிக்கு தீர்வு காணலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
Advertisment
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 6
Advertisment
Advertisements
கீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு ஒரு டீஸ்பூன்
மஞ்சள் ஒரு டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு, அதில் முடக்கத்தான், தட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன்பிறகு, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
இந்த தண்ணீர் 3 டம்பளரில் இருந்து முக்கால் டம்ளராக மாறியவுடன், அதனை வடிகட்டி மாலைவேலையில் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இப்படி செய்யும்போது முடக்கத்தான் வாதத்தை குறைக்கும். மஞ்சள் நமது உடலில் தாமிரத்தை குறைக்கும். மூட்டுகள் வீங்குவதற்கு இன்ப்ளமேஷன் என்று சொல்வார்கள். முடக்குவாதம் அதிகம் இருக்கும்போது சி.ஆர்,பி அதிகமாக இருக்கும்.
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் முடக்கத்தான் தண்ணீர் எடுத்துக்கொள்ளும்போது, அவர்களுக்கு சி.ஆர்.பி நிலை சமமாகி உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்று டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.