பொதுவாக அசைவ உணவுகள், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது என்று சொல்வார்கள். அதிலும் குறிப்பாக மீன் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவாக இருந்து வருகிறது. மீன்களில் இருக்கும் சத்துக்கள் நமக்கு பெரிய நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில், எந்த வகையான மீன் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, டாக்டர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
Advertisment
மீன்களில் 2 வகை மீன்கள் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று கானாங்கெலுத்தி மற்றொன்று மத்தி மீன். ஒரு சிலர் இந்த மீனை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் இந்த 2 மீன்களிலும் அளவுக்கு அதிகமான ஒமேகா 3 ஃபேக்ட் ஆசிட்ஸ் இருக்கிறது. வெறும் 100 கிராம் மீனில், குறிப்பாக மத்தி மீன் என்றால், 10 கிராம் மீனில், 1480 மில்லி கிராம், ஒமேகா 3 ஃபேக்ட் ஆசிட்ஸ் இருக்கிறது.
பெண்கள் என்றால் ஒரு நாளைக்கு 1100 மில்லி கிராம், ஆண்கள் என்றால், ஒரு நாளைக்கு, 1600 மில்லி கிராம் ஒமேகா 3 ஃபேக்ட் ஆசிட்ஸ் தேவைப்படும. இதன் காரணமாக மத்தி மற்றும் கானாங்கெலுத்தி மீனை வெறும் 100 கிராம் எடுத்துக்கொண்டாலே ஒரு நாளைக்கு தேவையான ஒமேகா 3 ஃபேக்ட் ஆசிட்ஸ் பெறலாம் என்று கூறியுள்ளார்.