பாலுடன் கொஞ்சுண்டு தேன்... விந்து சீக்கிரம் முந்தாமல் தடுக்கும்; இந்த நேரத்துல குடிச்சுப் பாருங்க: டாக்டர் யோக வித்யா
விந்து முந்துதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் சரியான காரணம் கண்டறியப்படுவதில்லை. இருப்பினும், பொதுவாக உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளின் கலவையாக இது கருதப்படுகிறது.
விந்து முந்துதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் சரியான காரணம் கண்டறியப்படுவதில்லை. இருப்பினும், பொதுவாக உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளின் கலவையாக இது கருதப்படுகிறது.
தாம்பத்திய உறவில் விந்தணு விரைவில் வெளியேறுவது இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பாலியல் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் வெப்பம் அதிகமாக இருப்பது தான் என்றும் இதனை தடுப்பது எப்படி என்றும், டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.
Advertisment
தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, கைப்பழக்கம் இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா? என்பது குறித்து சந்தேகங்கள் அதிகம் இருக்கிறது.
அதேபோல், திருமணமானவர்கள், எவ்வளவு தான் தாம்பத்தியம் இருந்தாலும், இன்னும் சிறப்பாக செயல்பட வயகரா இருக்குமா என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பலரும் தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர். அந்த வகையில் ஒன்றுதான் விந்து முந்துதல். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் இந்த பிரச்னையை சந்தித்து வருகின்றனர்.
விந்து முந்துதலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் சரியான காரணம் கண்டறியப்படுவதில்லை. இருப்பினும், பொதுவாக உளவியல் மற்றும் உயிரியல் காரணிகளின் கலவையாக இது கருதப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். மன அழுத்தம், கவலை, மோசமான பாலியல் அனுபவங்கள், ஹார்மோன் கோளாறுகள் என பல காரணங்களை சொல்லலாம். இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து டாக்டர் யோகவித்யா டிப்ஸ் கொடுத்துள்ளார்.
Advertisment
Advertisements
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, காரமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, கசப்பான உணவுகளை குறைத்துக்கொள்வது, கோதுமை உள்ளிட்ட பொருட்களை தவிர்ப்பது, உடலில் வெப்பத்தை தடுக்கும். அதேபோல் உள்ளடைகளை இறுக்கமாக இல்லாமல், எளிதாக அணிய வேண்டும். தூங்குவதற்கு முன்பு, பாலில் தேன் கலந்து குடித்தால், உடல் வெப்பம் தனியும். விந்து விரைவில் வெளியேறுவது தடுக்கப்படும் என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.