அண்ணாச்சி, நெல்லி... கழுத்தில் கருமை மறைய; முகம் பளீச் ஆக: டாக்டர் நித்யா டிப்ஸ்
உணவு முறைகளைப் பொறுத்தவரை, சில முக்கியமான மூலிகைகளை நாம் பயன்படுத்தலாம். கருஞ்சீரகம் ஒரு முக்கியமான மூலிகை. இது உஷ்ணத்தன்மை கொண்டது என்றாலும், சில மூலிகைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது உடலில் பல நன்மைகளைத் தருகிறது.
உணவு முறைகளைப் பொறுத்தவரை, சில முக்கியமான மூலிகைகளை நாம் பயன்படுத்தலாம். கருஞ்சீரகம் ஒரு முக்கியமான மூலிகை. இது உஷ்ணத்தன்மை கொண்டது என்றாலும், சில மூலிகைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது உடலில் பல நன்மைகளைத் தருகிறது.
முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் கருமை திட்டுகள், பரவி நமக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இதை சரி செய்ய, முதலில் குடல் பகுதியையும், கல்லீரல் பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இதற்காக என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பது குறித்தும் டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Advertisment
பொதுவாக, நம் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அது முதலில் முகத்தில்தான் பிரதிபலிக்கும். உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் சருமத்திலும் வெளிப்படும். நாளடைவில், இந்த பாதிப்புகள் படிப்படியாக முகத்திலும் தெரிய ஆரம்பிக்கும். முகத்தில் பாதிப்பு என்பது முகத்தின் பொலிவு இழப்பதைக் குறிக்கிறது. நம் உடலில் உள்ள கழிவுகளின் தேக்கத்தால் ஏற்படலாம். குறிப்பாக, நாம் உண்ணும் சில உணவுகளால் குடல் கழிவுகள் அதிகமாகி, அதன் விளைவாகவும் முகத்தில் இந்த மாற்றங்கள் தெரியும். சிலருக்கு கண்களைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். முகத்தின் ஒரு பகுதி மட்டும் கருப்பாகத் தெரியும்.
கழுத்தைச் சுற்றிலும், குறிப்பாக நகைகள் அணியும் பகுதிகளில், கருமையான திட்டுகள் காணப்படும். இந்த கருமை திட்டுகள் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் பரவி நமக்கு பாதிப்பை உண்டாக்குகிறது. இதை சரி செய்ய, முதலில் குடல் பகுதியையும், கல்லீரல் பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.
உணவு முறைகளைப் பொறுத்தவரை, சில முக்கியமான மூலிகைகளை நாம் பயன்படுத்தலாம். கருஞ்சீரகம் ஒரு முக்கியமான மூலிகை. இது உஷ்ணத்தன்மை கொண்டது என்றாலும், சில மூலிகைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தும்போது உடலில் பல நன்மைகளைத் தருகிறது. கருஞ்சீரகத்துடன் சீரகத்தைச் சேர்த்துப் பயன்படுத்தலாம். 50 கிராம் கருஞ்சீரகத்துடன் 10 கிராம் சீரகம் சேர்த்து உட்கொள்ளலாம். இப்படி கருஞ்சீரகம் மற்றும் சீரகம் உணவில் சேர்த்துப் பயன்படுத்தும்போது, உடலில் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகம் மற்றும் சருமத்தில் பொலிவு உண்டாகிறது.
Advertisment
Advertisements
இவற்றை நாம் தினந்தோறும் உடலுக்கு மருந்தாகச் சாப்பிடலாம். 50 கிராம் கருஞ்சீரகப் பொடியுடன் 100 கிராம் சீரகப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவு தினமும் காலையில் உட்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, படிப்படியாக முகத்தில் உள்ள கருமை நிறத் திட்டுகள் குறைய ஆரம்பிக்கும்.
இதைத் தவிர, உடலில் உள்ள நச்சுக்களைக் குறைக்க இன்னும் சில வழிமுறைகள் உள்ளன. எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, இஞ்சி தேன் கலவை போன்றவற்றை உட்கொள்ளலாம். இவை சருமத்திற்குப் பொலிவைத் தரும். சித்த மருத்துவத்தில் பரங்கிப்பட்டை பதங்கம் என்ற ஒரு மருந்து உள்ளது. இந்த பரங்கிப்பட்டை பதங்கத்தை காலை, இரவு என இருவேளைகளில் பயன்படுத்தலாம். அரை ஸ்பூன் அளவு எடுத்து, பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும்.
பரங்கிப்பட்டை பதங்கம் பலவிதமான பிரச்சனைகளுக்குப் பயன்படுகிறது. முகத்தில் அல்லது உடலில் வேறு எங்கும் கருமையான திட்டுகள் இருந்தாலும், அவற்றையும் சரி செய்ய பரங்கிப்பட்டை பதங்கம் உதவும். ஒரு சிட்டிகை அளவு எடுத்து, கீரைகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். கீரை வகைகள் சாப்பிடும்பொது கழுத்தை சுற்றியுள்ள கருமை நிறம் மறையும். அதேபோல் அன்னாசி, ஆப்பிள், நெல்லி உள்ளிட்ட பழங்களை சாப்பிடும்போதும் முகத்தில் ஏற்படும் கருமை நிறம் மாறும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.