விந்தணுவை அதிகரிக்க... இந்த பூவுடன் கொஞ்சம் பால்: டாக்டர் யோக வித்யா

தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.

தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
yoga

தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், தாம்பத்தியம் தொடர்பாக ஆண்களுக்கு பல சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. தங்களுக்கு பிரச்னை என்று நினைக்கும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வலைதளங்களில் அதற்கான வழிகளையும் தேடி வருகின்றனர்.

Advertisment

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் விந்தணு உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்ற கேள்வி பல ஆண்களுக்கு இருக்கும். இது குறித்து டாக்டர் யோகவித்யா பதில் அளித்துள்ளார். விந்தணு உற்பத்தி அதிகமாகி சீக்கிரமாக குழந்தை பிறக்க வேண்டும் என்றால் இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க என்று சொல்லி, டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.

முருங்கை பூவை எடுத்து பாலில் கலக்கி அதில் 2 சிட்டிகை ஜாதிக்காய் பொடியை சேர்த்து, தினமும் இரவில் குடித்து வர வேண்டும். 48 நாட்கள் குடித்தபிறகு, உங்கள் விந்தணு உற்பத்தி குறித்து டெஸ்ட் எடுத்து பார்த்தால், விந்தணு அதிகரித்துள்ளது தெரியும். அதேபோல் ஆலமரத்தின் பழம், விழுது, கொழுந்து இவை மூன்றையும் சமபங்கு எடுத்துக்கொண்டு, அதை இழைத்து உடனே பாலில் கலந்து குடிக்கலாம்.

இல்லை என்றால் நன்றாக காயவைத்து பவுடர் செய்து தினமும் ஒரு சிட்டிகை, எடுத்து தேனில் கலந்து காலை இரவு 2 வேளையும் குடித்து வரலாம். 
48 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால், விந்தணு உற்பத்தியில் மாற்றம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். 

Advertisment
Advertisements

அதேபோல் சிலாசர்த்து கர்ப்பம் எடுத்துக்கொண்டு, ஒருவரின் உடல் எடை மற்றும் பலத்தை பொறுத்த 1-3 கிராம் வரை வேகவைத்த முட்டையை பாதியாக வெட்டி அதில் வைத்து தினமும் காலை உணவில் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடும்போது விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: