/indian-express-tamil/media/media_files/MfGpZniQPFS890wR1g9U.jpg)
பொதுவாக நம் உண்ணும் உணவில் அதிக காரம் இருந்தால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும் என்று சொல்வார்கள். அதேபோல், வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாயில் மேல் நோக்கி வருவதால் இந்த பிரச்னை உருவாகும். அதிக காரமான, புளிப்பான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, அவசர அவசரமாக சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் படுத்துக்கொள்வது, அதிக உடல் எடை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல், உள்ளிட்ட பழக்கங்களினாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.
இந்த பிரச்னை உடலில் வந்தால், மார்பு அல்லது தொண்டையில் எரிச்சல் உணர்வு, வாயின் பின்புறத்தில் புளிப்பு அல்லது கசப்பான சுவை, விழுங்குவதில் சிரமம், நெஞ்சு வலி, இருமல். தொண்டை மற்றும் சைனஸ் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பது நெஞ்சு எரிச்சல் போக்குவதற்கு சிறந்த தீர்வாக இருக்கும். அதேபோல், இநத நெஞ்சு எரிச்சலை போக்குவதற்கு வெண்பூசணி முக்கிய மருத்துவ நன்மையை கொடுக்கும்.
வெண்பூசணியில், அதிக நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்டது. இதனால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதோடு, அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அதேபோல் காய்கறி சாறுகளில் வெண்பூசணி சாரு முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. உடலில் ஏற்படும் அசிடிட்டியை குறைத்து, உடலில் ஏற்படும் அமிலத்தன்மையை குறைக்கிறது. வயிற்றில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் வல்லமை வெண்பூசணி சாறுக்கு உண்டு. தொண்டையில் இருந்து வயிறு வரைக்கும் எரிச்சல் இருக்கும் நபர்களுக்கு வெண் பூசணி ஜூஸ் என்பது ஒரு அருமருந்தாக இருக்கிறது. வயிற்றிவ் நன்மை செய்யும் பாக்டீசியாவை அதிகரிக்கும் வல்லமை வெண்பூசணிக்கு உண்டு என்று டாக்டர், தீபா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.