உடலில் குடல் சுத்தமாக இருந்தால் தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதே சமயம் குடல் சுத்தம் உடல் சுத்தம் என்று சொல்வார்கள். தினமும் காலை மாலை என இரு வேளையும் மலம் கழிக்க வேண்டும். ஆனால் குடல், ஆரோக்கியமாக இல்லாத நிலை இருந்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அந்த வகையில் உடனடியாக குடலை சுத்தம் செய்ய இந்த ஜூஸை குடிக்கலாம் என்று டாக்டர் ஷர்மிளா கூறியுள்ளார்.
வாரம் முழுவதும் வேலைக்கு செல்வோராக நீங்கள் இருந்தால், விடுமுறை கிடைக்கும் ஒரு நாளில் இந்த டிப்ஸை நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு தேவையான முக்கிய பொருள் நெல்லிக்காய் தான்.
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 2
தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்
கருவெப்பிலை – ஒரு கைப்பிடி
தண்ணீர் – 50-75 எம்.எல்.
செய்முறை:
முதலில் நெல்லிக்காய், துண்டு துண்டாக வெட்டி கொட்டையை எடுத்துவிட்டு தனியாக எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேன் கலந்து, கருவேப்பிலையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
இந்த கலவையை நன்றாக அரைத்து எடுத்தவுடன் அதனை வடிகட்டி எடுத்து குடித்துவிட வேண்டும். இவ்வாறு குடிக்கும்போது 4-5 முறை மலகம் கழிக்கும் நிலை வரும். தொடர்ந்து லூஸ் மோஷனாக போய்க்கொண்டே இருக்கும்.
குடல் சுத்தமாகிவிட்டது சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும்போது ஒரு க்ளாஸ் மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிட்டு, முடித்துக்கொள்ளலாம் என்று டாக்டர் ஷர்மிளா கூறியுள்ளார்.