பொதுவாக சூடான உணவு பொருட்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பதை பலரும வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வெந்நீர் குடிப்பது, டீ, காபி உள்ளிட்ட திரவங்களை சூடாக சாப்பிடுவதையே பலரும் விரும்புகின்றனர். அதே ஒரு நாளைக்கு டீ மற்றும் காபியை அதிகம் குடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். வீட்டில் டீ காபி குடிக்கும்போது அது சூடாக இல்லை என்றால் அதை மீண்டும சூடாக்கி குடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
Advertisment
இந்த மாதிரி அதிக சூடன உணவுகளை சாப்பிடுவது எப்போதும் உடலுக்கு ஆபத்து தான். அதே சமயம் டீ மற்றும் காபியை சூடாக சாப்பிடுவது கேன்சர் நோய் வர வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது. இது குறித்து பதில் அளித்துள்ள, டாக்டர் சபரிநாத், மிகவும் சூடான உணவு எப்போதும் உடலுக்கு நல்லதல்ல. கொதிக்கும் எண்ணெய் கையில் பட்டாலோ, அல்லது உடலில்ஊற்றினாலோ தோல் வெந்துவிடும்.
அதேபோல் நமது உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் மென்மையானவை. இந்த மென்மையான உறுப்புகளுக்கு மிகவும் சூடான கொதிக்க கொதிக்க டீ காபி குடித்தால், தொண்டை, உணவுக்குழாய், குடல் உள்ளிட்ட பகுதியில், புண்ணாகும். இந்த பிரச்னையால் கேன்சர் வர வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. ஆனால் கடைசி காலத்தில் வரலாம் வராமலும் போகலாம்.
Advertisment
Advertisements
அதே சமயம், கேன்சர் வரவில்லை என்றாலும், குடலின் உள்ளே ஓட்டை, வயிற்றில் ஓட்டை விருந்து அல்சர், அசிடிட்டி என்று வந்தால், அந்த பாதிப்பு பெரிய அளவில் வந்துவிடும். அதனால் வெந்நீர் என்றாலும் லேசான சூடு தான் இருக்க வேண்டும். கொதிக்க கொதிக்க குடிக்க கூடாது. சூடு செய்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கொதிக்க வைத்து அறவைத்து குடியுங்கள். ரொம்ப கொதிக்கும் தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் இரண்டுமே கெடுதல் தான். சராசரியான தண்ணீர் தான் உடலுக்கு நல்லது என்று கூறியுள்ளார்.