உடல் ஆரோக்கியதுடன் இருக்க நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியம். இந்த நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டும் தான் எந்த நோயும் நம்மை தாக்காமல், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். நாம் தினமும் சாப்பிடும் உணவில் இருந்து தான் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் காரணமாக ஆரோக்கியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Advertisment
அந்த வகையில் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் மருத்துவ குணம் நிறைந்த முக்கிய உணவு பொருட்களில் ஒன்று மஞ்சள் தூள். எந்த உணவை சமைத்தாலும் அதில், மஞ்சள் தூள் சேர்க்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கிறது. இது சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்று நினைத்து சேர்த்தாலும், மஞ்சள் தூள் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பது பலரும் அறிந்த ஒன்று. நாம் எந்த உணவை சமைத்தாலும் அதில் இறுதியாக மஞ்சள் தூள் சேர்ப்பது நல்லது.
உணவில் மஞ்சள் தூள் சேர்த்து சமைப்பதை விட, எந்த உணவாக இருந்தாலும் சமைத்து முடித்தவுடன், இறக்கும்போது அதில் 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து இறக்கினால் மஞ்சளின் மருத்துவ குணம் அப்படியே கிடைக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். மஞ்சள் தூள் இப்படி சேர்க்கும்போது உடலில் இமினுட்டியை அதிகரிக்கும். உணவில் மஞ்சள் தூள் சேர்த் ரொம்ப நேரம் கொதிக்கவிட்டால் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் போய்விடும். அதனால் தான் உணவை இறக்கும்போது அதில் மஞ்சள் தூள் சேர்த்து இறக்க வேண்டும்.
அதேபோல் காரத்திற்கு நாம் அதிகமாக மிளகாய் வற்றல் பயன்படுத்துகிறோம். மிளகாயில் சில நன்மைகள் இருக்கிறது என்றாலும் கூட, மிளகாய் வற்றல் நமக்கு கெடுதல் தரும். இந்த தீங்கை நீங்குவதற்கு, உணவில் மஞ்சள் தூள் சேர்ப்பது அவசியம். மிளகாய் வற்றலில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்குமா என்று பலரும் பயப்படுகிறார்கள். ஆனால் மிளகாய் வற்றல் சேர்க்கும்போது கூடவே மஞ்சள் தூள் சேர்த்தால் அதில், பாதிப்பு இருக்காது.
Advertisment
Advertisements
இந்த வகையில் மஞ்சள் தூளை உணவில் சேர்க்கும்போது, ஏதாவது ஒரு வகையில் புற்றுநோய் நம்மை தாக்கும் என்ற பயம் இல்லாமல், இருக்கலாம். புற்றுநோய் வருவதற்கு இதுதான் காரணம் என்று நாம் குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் அது வராமல் தடுப்பதற்கு மஞ்சள் தூள் பயன்படுகிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.