ஒரு ஸ்பூன் பார்லி அரிசி, பாதி முள்ளங்கி... யூரிக் அமில பிரச்னைக்கு பை சொல்லுங்க: டாக்டர் பொற்கொடி
உடலில், சிறுநீரக நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், யூரிக் அமிலத்தின் உற்பத்தி மற்றும் அதன் வெளியேற்றத்தை பாதிக்கலாம்.
இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம். உடல் பியூரின்களை உடைக்கும்போது உருவாகும் இந்த யூரிக் அமிலம், மனித உடலுக்குள்ளும் சில உணவுகளிலும் இயற்கையாகவே காணப்படுகின்றன. உடல் இரத்த ஓட்டத்தில் சிறிது யூரிக் அமிலம் இருப்பது இயல்பானது மற்றும் அவசியமானது என்றாலும், அதிக அளவு யூரிக் அமிலம் இருப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
Advertisment
வயது, பாலினம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு காரணிகள் யூரிக் அமில செறிவுகளைப் பாதிக்கின்றன. இந்த அளவுகளைத்தான் சுகாதார வல்லுநர்கள் கண்காணித்து அவை ஆரோக்கியமான வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்கிறார்கள். இது மரபியல் நோயாகவும் பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் அதிக யூரிக் அமிலம் அல்லது கீல்வாதம் போன்ற தொடர்புடைய நோய்கள் இருந்தால், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உடலில், சிறுநீரக நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால், யூரிக் அமிலத்தின் உற்பத்தி மற்றும் அதன் வெளியேற்றத்தை பாதிக்கலாம். இரத்தப் பரிசோதனை யூரிக் அமிலத்தின் அளவை அளவிடும், அதே சமயம் சிறுநீர்ப் பரிசோதனை சிறுநீரில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவைக் கண்டறிய உதவும். உணவு முறையை மாற்றியமைத்தல், எடை குறைத்தல் மற்றும் உடற்பயிற்சி செய்வதை மேம்படுத்துதல் போனற் செயல்கள் யூரிக் அமில அளவை குறைக்கலாம்.
Advertisment
Advertisements
உடலில் யூரிக் அமில பாதிப்பை குறைக்க, ஒரு டேபிள் ஸ்பூன் பார்லி அரிசியை எடுத்து நன்றாக கழுவி, அதனுடன், நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி வேகவைத்து, அந்த தண்ணீர் ஒரு கப்பாக சுண்டிய பிறகு எடுத்து, அதனை வடிகட்டி குடித்தால் உடலில் யூரிக் அமில பாதிப்பு குறையும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அல்லர் இரவில் தூங்குவதற்கு முன்னதாக குடிக்கலாம் என்று டாக்டர் பொற்கொடி கூறியுள்ளார்.