New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/11/W3nYwd5rZL41F3Y6MynT.jpg)
ஆண்களுக்கு மீசை தாடி இருந்தால் அது வழக்கமானது. ஆனால் பெண்களுக்கு இப்படி இருந்தால், இதை ஹிர்டுடிசம் என்று சொல்வார்கள்.
மனித இனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வித்தியாசம் கொடுப்பது மீசையும் தாடியும் தான். பொதுவாக ஆண்களுக்கு மீசை தாடி இருப்பதுர் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் கூட, ஒரு சில பெண்களுககும் லேசாக மீசை தாடி இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால். ஒரு சில பெண்களுக்கு ஆண்களை போலவே மீசையும் தாடியும் இருக்கும். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், எப்படி சரி செய்வது என்பது குறித்தும் டாக்டர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்களுக்கு மீசை தாடி இருந்தால் அது வழக்கமானது. ஆனால் பெண்களுக்கு இப்படி இருந்தால், இதை ஹிர்டுடிசம் என்று சொல்வார்கள். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு பி.சி.ஒ.டி பிரச்னை இருக்கிறது. நீர்க்கட்டி பிரச்னை என்று சொல்வார்கள். மாதவிலக்கு சரியாக இல்லாதது, கருதரிப்பு தள்ளிப்போவது உள்ளிட்ட பிரச்னைகள் இதனால் ஏற்படும். இன்சுலின் எதிர்ப்பு தன்மை கான்பிளக்ஸில் வருவது தான் இந்த பி.சி.ஒ.டி பிரச்னை.
இனசுலின் எதிர்ப்பு தன்மையின் காரணமாக, சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கல்லீரல் கொழுப்பு, உள்ளிட்ட பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அந்த வகையில் ஒரு முக்கிய பிரச்னை தான் இந்த பி.சி.ஒ.டி பிரச்னை. இன்சுலின் சரியாக இருந்தால், பெண் ஹார்மோன்கள் சரியாக இருக்கும். ஆனால் இன்சுலின் எதிர்ப்புதன்மை இருந்தால் பெண்களில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் சுரக்க தொடங்கும்போது தான் மீசை தாடி முளைக்கும் நிலை உருவாகும்.
பல பெண்கள் இதனை தீர்ப்பதற்கு, மாத்திரைகள், ஷேவ் செய்வது, பியூட்டி பார்லர் போய் ரிமோவ் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்வார்கள். ஆனால் இப்படி செய்வதை விட, சரியான டயட் முறையை கடைபிடித்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். ஹார்போஹைட்ரேட் அதிகம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். பி.சி.ஒ.டி பிரச்னை இருந்தால் சிறந்த உணவு மாவுச்சத்து இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.