இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய்களுக்கு தீர்வு தேடி பல்வேறு ஆங்கில மருத்துவத்தை நாடி வரும் இவர்களுக்கு வீட்டில் இருக்கும் சமையல் பொருட்களை வைத்தே, பல பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என்பது தெரியவதில்லை. அந்த வகையில், 45 வயதை கடந்த பெண்கள், சந்திக்கும் முக்கிய பிரச்னைகளுக்கு ஒரு பொடி தீர்வு தரும் என்று, டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார்.
Advertisment
பொதுவாக ஆண்கள் பெண்கள் உடலமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்கும். அதே சமயம், 45 வதை கடந்துவிட்டாலே பல்வேறு பிரச்னைகளும் இவர்கள் சந்திப்பார்கள். குறிப்பாக பெண்கள் உடலளவில் பெரிய மாற்றங்களையும், பிரச்னைகளையும் சந்திக்கும் கட்டமாக இந்த 45 வயதிற்கு மேல் இருக்கும். இந்த வயதில் முதுகு வலி, மூட்டுவலி, உடல் எடை அதிகரிப்பு, தோல் சுறுக்கம், வறட்சி, அதிகமாக வியர்வை உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பது நடக்கும்.
அதிலும் குறிப்பாக, மாதவிடாய் சுழற்சி இறுதிக்கட்டத்தில் எட்டும் இந்த காலக்கட்டத்தில் மனோபாஸ் பிரச்னையால் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்னையை எதிர்கொள்ள டாக்டர் உஷாநந்தினி ஒரு தீர்வை கூறியுள்ளார். தினமும் காலையில், ஆளி விதை பொடியை அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், மேற்கூறிய அனைத்து பிரச்னைகளும் நீங்கும். குறிப்பாக, புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
நீங்களும் 45 வயதை கடந்தவர் மாதவிடாய் சுழற்சி இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. மனோபாஸ் பிரச்னையை சந்திப்பவர் என்றால், இந்த மருத்துவ குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.