/tamil-ie/media/media_files/uploads/2022/01/Period-pain-mentrual-cramps.jpg)
குடும்பத்தில் ஒரு பெண் இல்லை என்றால், அந்த குடும்பம் கடுமையான கஷ்டத்தை அனுபவிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதே அந்த பெண் 50 வயதை கடந்துவிட்டால், மனோபாஸ் பிரச்னையினால் கணவர் மற்றும் பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாமல் போய்விடுவார். யாருமே இல்லாத ஒரு தனிமையில் தனது ஈஸ்ரோஜன் குறைபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த பிரச்னை அவர்களின் மாதவிடாய் நிற்கபோகும் நிலையை அவர்களுக்கு உணர்த்தும்.
இந்த நிலையில், அவர்கள் அதிகமாக கோபப்படுவது, உடலில் வலு இழந்து இருப்பது, போன்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த நிலையில், அவருக்கு கணவர், பிள்ளைகள் என அனைவரும் பாதுகாப்பாகவும் அரவணைத்தும் இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் அவர்களின் உடம்பும், எலும்புகளும் மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த நேரத்தில் அவர்களின் குடும்பம்தான் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் முதல் விஷயமாக, கால்சியம் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கால்சியம் சத்தை எடுத்துக்கொள்ளும்போது ஆஸ்டியோபோரசஸ் அப்போது தான் கிடைக்கும். இந்த சத்தை கொடுக்கக்கூடிய உணவு கேழ்வரகு. இருக்கும் உணவுப்பொருட்களில் கால்சியம் அதிகம் இருப்பது இந்த கேழ்வரகில் தான். கேழ்வரகு, பிரண்டை துவையல் இதையேல்லாம் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அதோடு மனதில் இருக்கும் பயம் மற்றும் பதட்டத்தை குறைக்கும் சக்தி மாதுளை பழத்திற்கு உள்ளது. மாதுளை உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய ஹார்மோன்களை உருவாக்குகிறது.
இதன் காரணமாக 47-48 வயதில் இருந்து தினசரி உணவில் மாதுளை பழ ஜூஸ் எடுத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். மாதவிடாய் முடியும் தருணத்தில் நாம் நமது உடலுக்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அக்கரை இதுதான் என்று டாக்டர் சிவராமன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.