ஆண் பெண் யாராக இருந்தாலும், உடல் எடை அதிகரிப்பு என்பது பெரிய பிரச்னை தான். உடல் மெலிந்த நபர்களை விட, உடல் எடை அதிகமான நபர்களுக்கு தான் அதிகமான நோய் தாக்கம் இருக்கிறது. இதனால் உடல் எடையை சரியாக வைத்திருப்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. அதே சமயம், மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பலரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர்.
Advertisment
குறிப்பாக பெண்கள், பிரசவத்திற்கு பிறகு, உடல் எடை அதிகரித்து, பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது கர்ப்பப்பை கழிவுகள். ஒரு பெண் பிரசவம் அடைந்த பின்பு, கர்ப்பப்பையில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இந்த கழிவுகள் இயற்கையாகவே வெளியேறுவதற்கு, அதற்கு தகுந்த மருத்துவ பொருட்களை சாப்பிட வேண்டும்.
அந்த வகையில், என்ன மாதிரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து டாக்டர் மைதிலி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். பிரசவித்த தாய்மார்கள் இரவு தூங்க செல்லும்முன் ஒரு டம்பளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சதக்குப்ப விதைகள், வெந்தயம், தலா ஒரு டீஸ்பூன் எடுத்து அந்த ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்துவிடவும். மறுநாள் காலையில், அந்த ஒரு டம்பளர் தண்ணீரில் மேலும் ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
Advertisment
Advertisements
தண்ணீர் 45 மில்லி வந்தவுடன், அதனை வடிகட்டி, அதில் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை, அரை டீஸ்பூன் சுத்தமான நெய், காலையில் வெறும் வயிற்றில், 60 நாட்களுக்கு குடித்து வந்தால், கர்ப்பப்பை ஆரோக்கியமான இருக்கும் தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் மற்றும் பிரசவம் முடிந்தவுடன், கர்ப்பப்பை கழிவுகள் இயற்கையாக வெளியேற இது உதவும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.