நமது உடலின் அடிப்படை கட்டுமானம் என்றால் அது புரதச்சத்து தான். அமினோ அமிலங்களால் ஆன இந்த புரதம், தசைகள், எலும்புகள், தோல், முடி மற்றும் உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். மேலும், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான ஆன்டிபாடிகள் போன்ற முக்கியமான மூலக்கூறுகளை உருவாக்கவும் புரதம் உதவுகிறது.
Advertisment
ஆன்டிபாடிகள் புரதத்தால் ஆனவை, அவை உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. பல ஹார்மோன்கள் மற்றும் நொதிகள் புரதத்தால் ஆனவை, அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு அவசியம். கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் முதன்மை ஆற்றல் ஆதாரங்களாக இருந்தாலும், தேவைப்பட்டால் புரதத்தையும் ஆற்றலுக்காக உடல் பயன்படுத்தலாம். ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான புரதத்தின் அளவு அவர்களின் உடல் எடை, வயது, பாலினம் மற்றும் செயல்பாட்டு நிலையைப் பொறுத்தது.
அதே சமயம் உடலுக்கு புரதம் அதிகம் வேண்டும் என்றால், முட்டை தான் சிறந்த உணவு. எளிமையாக கிடைக்கும் அதில் அதிக புரதம் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் முட்டையை விட மற்ற பொருட்களில் அதிக புரதச்சத்து இருக்கிறது. அவை என்னென்ன உணவுகள் என்பது குறித்து டாக்டர் ரதி கூறியுள்ளார்.
உடலுக்கு வெறும் புதரம் மட்டும் இருந்தால் போதாது, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்களும் இருக்க வேண்டும். ஒரு முட்டையில் 6 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது. ஆனால் இதை விட அதிகமாக பச்சைபட்டாணியில் புரதம் அதிகமாக உள்ளது. ஒரு கப் பச்சை பட்டாணியில், 8.6 கிராம்வரை புரதம் உள்ளது, மேலும் இதில் மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. உடலின் தசை செயல்பாட்டுக்கு மெக்னீசியம் மிக முக்கியமானது.
Advertisment
Advertisements
அடுத்து சிக்கன் பி்ரஸ்ட். 100 கிராம் சிக்கன் பிரஸ்டில் 28 கிராம் புரதம் உள்ளது. இதில் பாஸ்பரஸ் தாது அதிகம் உள்ளது. இது உடலின் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக 35 வயதுக்கு மேலான பெண்களுக்கு இது மிக மிக மு்கிகயமான உணவு. இந்த சிக்கனை வேக வைத்து அல்லது கிரில் செய்து சாப்பிடலாம். ஆனால் பிரை செய்து சாப்பிட கூடாது. அவ்வாறு சாப்பிடும்போது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும் என்று கூறியுள்ளார்.