கொலஸ்ட்ராலுக்கு இனி மாத்திரை எடுக்காதீங்க... வெறும் சுடு தண்ணீர் போதும்; சீக்கிரம் கரைக்கலாம்: டாக்டர் யோக வித்யா
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாத்திரையை பயன்படுத்துவார்கள். ஆனால் மாத்திரை பயன்படுத்தாத அளவுக்கு உணவுகளை வைத்து சரி செய்யலாம் என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாத்திரையை பயன்படுத்துவார்கள். ஆனால் மாத்திரை பயன்படுத்தாத அளவுக்கு உணவுகளை வைத்து சரி செய்யலாம் என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார்.
நம் உடலால் உற்பத்தி செய்யப்படும் கொழுப்பை கொலஸ்ட்ரால் என்று சொல்வார்கள். இது நம் உடல் செல்கள் சீராக செயல்படவும், ஹார்மோன்கள் உற்பத்திக்கும், வைட்டமின் D உற்பத்திக்கும் அவசியமானது. இருப்பினும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது அது பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இதில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகைகள் உள்ளது.
Advertisment
கெட்ட கொலஸ்ட்ரால் என்பது, தமனிகளின் சுவர்களில் படிந்து, பிளேக்குகளை உருவாக்குகிறது. இந்த பிளேக்குகள் தமனிகளைச் சுருக்கி, கடினமாக்கி, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதனால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். நல்ல கொலஸ்ட்ரால் என்பது, இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்றி, மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு செல்கிறது. கல்லீரல் அதை உடலில் இருந்து நீக்க உதவுகிறது. எனவே, HDL கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாத்திரையை பயன்படுத்துவார்கள். ஆனால் மாத்திரை பயன்படுத்தாத அளவுக்கு உணவுகளை வைத்து சரி செய்யலாம் என்று டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்று தெரிந்தவுடன், நாம் உடனே அதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வோம். ஆனால், அதே நேரத்தில், "இன்னும் இரண்டு வடை கூடுதலாக கொடுங்கள், இரண்டு பூரி கொடுங்கள்" என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறோம்.
இப்படிச் செய்தால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது நமக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஐந்து ஆண்டுகளாக கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு மெதுவாக ஞாபக மறதி வரலாம். அப்படி இருக்கும்போது, கொலஸ்ட்ரால் உங்களுக்கு நிச்சயம் குறையாது. உணவிலும் நமது செயல்களிலும் தான் கொலஸ்ட்ரால் அதிகமாகியுள்ளது. அதனால், கொலஸ்ட்ரால் அதிகமானால் மாத்திரை சாப்பிடாமல், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
குழம்பு முழுவதும் எண்ணெய் மிதக்கவிட்டு சாப்பிடுவது, எண்ணெய் பொருட்கள் அதிகம் எடுத்துக்கொள்வது, இதை கட்டப்படுத்தினாலே கொலஸ்ட்ரால் குறைந்துவிடும். இதுமட்டுமல்லாமல், உணவில் எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், கருஞ்சீரகம், சுடுதண்ணீர் இதை எல்லாம் ரெகுலராக எடுத்துக்கொள்ளும்போது கொலஸ்ட்ரால் கொஞ்சம் கொஞ்சமாக குறையம். வாக்கிங் சென்றாலும் ரத்ததில் கொலஸ்ட்ரால் குறையும் என்று கூறியுள்ளார்.