மனித உடலில் சேமிக்கப்படும் கொழுப்பு திசுக்களைக் உடல் கொழுப்பு என்று சொல்லலாம். உடலுக்கு ஆற்றலை சேமிப்பதற்கும், உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதற்கும், உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிப்பதற்கும் கொழுப்பு அவசியம். ஆனால், அளவுக்கு அதிகமாக கொழுப்பு சேர்வது உடல் பருமன் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Advertisment
பொதுவாக இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற திட நிலையில் காணப்படும் கொழுப்பு. அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்பு இதய நோய்கள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், மீன் போன்ற உணவுகளில் உள்ளது. ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் இதில் அடங்கும். இவை மூளை செயல்பாடு மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் (நிறைவுறாக் கொழுப்புகள்) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். துரித உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்வது உடல் கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவும்.
நல்ல தரமான உறக்கம் உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்த முக்கியம். மன அழுத்தம் உடல் கொழுப்பை அதிகரிக்கலாம். யோகா, தியானம் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் உதவும். உடல் கொழுப்பை குறைப்பது குறித்து கூறியுள்ள டாக்டர் உஷா நந்தினி, ஒரே ஒரு நெல்லிக்காய், ஒரு ஹால்ஃப் இன்ச் இஞ்சித் துண்டு, மற்றும் இரண்டு கல் உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
Advertisment
Advertisements
இந்த விழுதை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, மூன்று மணி நேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். இந்த பானத்தை நீங்கள் காலை பதினொரு மணி முதல் மாலை நான்கு மணி வரையிலான நேரத்தில் குடிக்கலாம். குறிப்பாக, நான் குறிப்பிட்டது போல, நெல்லிக்காய் மற்றும் இஞ்சியை வைத்து இந்த பானத்தைத் தயாரித்து நீங்கள் அருந்தினால், உங்கள் வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளில் தேங்கியிருக்கும் கொழுப்பு குறையத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.