/indian-express-tamil/media/media_files/2025/05/21/OJh0l7wseZlE73LJPBzV.jpg)
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் தினமும் மலம் கழிக்க வேண்டியது அவசியம். தினமும் மலம் கழிப்பது தான் ஆரோக்கியமான வாழ்க்ககை்கு நல்லது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மாறி வரும் உணவு பழக்க வழக்கத்தின் காரணமாக பலரும் மலச்சிக்கல் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னையில் இருப்பவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட கூடாது? எப்படி தினசரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, டாக்டர் டெய்சி யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நிறைய பேர் வந்து எனக்கு மலம் கழிப்பது ரொம்ப சிரமமாக இருக்கிறது. மலம் இறுகி விடுகிறது என்று சொல்கிறார். அதேபோல், மலச்சிக்கல் பிரச்னையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இறுதியில் எனக்கு பைல்ஸ் மாதிரி இருக்கிறது, மீன, கறி எல்லாம் சாப்பிடும் போது, மலம் கழிப்பது சிரமமாக இருக்கிறது. எப்படியோ முக்கி மலம் கழித்தாலும், அங்க கொஞ்சம் வலி இருக்கு. அதேபோல் சில சமயங்களில் ரத்தம் வருகிறது என்று சொல்வார்கள்.
இது சாதாரண விஷயம் இல்ல. மலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்று சொல்வார்கள். மலச்சிக்கல் என்பது உடலில் ஏற்படும் அத்தனை நோய்க்கும் அம்மா மாதிரி என்று படிக்கிறோம். அதனால் இப்படி இந்த மலச்சிக்கல் இருக்கிறவர்கள், செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்றால் தயிர் சாதம் பக்கம் தலை வைத்தும் படுக்க கூடாது.தயிர் சாதம் மலத்தை கட்டக்கூடியது. அதேபோல் ஐஸ் வாட்டர் குடித்தால், மலச்சிக்கல் ரொம்ப அதிகமாகிவிடும்.
சாப்பிட்ட உணவை உறைய வைக்கும் சக்தி ஐஸ் வாட்டருக்கு இருக்கு. அதனால் ஐஸ் வாட்டர் குடிக்கவே கூடாது. உணவுக்கு பின்னால ஜிகர்தண்டா, ரோஸ் மில்க், ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம், இது மாதிரி உணவுகளை சாப்பிடவே கூடாது. அதேபோல் இரவு 7:30 மணிக்கு மேல் உணவு சாப்பிடக்கூடாது. இரவு உணவில் ராகி தோசை, அடை தோசை, ராகிக்களி, பயிறு வகைகள், பன்னீர் உள்ளிட்ட ஹை புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. தினமும் 3 லிட்டர் தண்ணி குடிக்க வேண்டும். இதெல்லாம் நீங்ககள் செய்யக்கூடாத ஒரு விஷயம் மலச்சிக்கல் என்பது இன்னும் சீரியஸ் நோய் என்பதை மறந்துட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.