/indian-express-tamil/media/media_files/2025/05/19/S8l9suMvCG1NiqtD9z5Q.jpg)
மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கல் என்று சொல்வார்கள். அந்த வகையில், மலம் கழிப்பதில் சிரமம் இருக்கிறது; கஷ்டப்பட்டுதான் கழிக்கிறேன்; ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் மலம் வருகிறது" என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், இதை ஒரு பெரிய பிரச்சினையாகவே அவர்கள் கருதுவதில்லை. நாம் உண்ணும் உணவு நம் உடலில் அதிகபட்சம் பத்து மணி நேரம் வரை இருக்கலாம். அதற்குப் பிறகு, அதை வெளியேற்றியே ஆக வேண்டும். அதனால்தான், காலை மற்றும் இரவு என இரு வேளையும் மலம் கழிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.
அதேபோல், இருமுறை மலம் கழிப்பதும், சிறுநீர் ஆறு முறை கழிப்பதும் அவசியம். "எனக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை கூட வருவதில்லை, அல்லது ஒரு முறை மட்டுமே வருகிறது" என்று சொல்பவர்கள், இந்த விஷயத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை மலம் வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, டாக்டர் ஷர்மிகா தருண் கூறியுள்ளார்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மலம் கழிக்கிறேன், தினமும் கஷ்டப்பட்டுதான் கழிக்கிறேன், சீராகப் போவதில்லை" என்று சொல்பவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று கேட்டால், வாயில் துர்நாற்றம் வீசும். பசி சுத்தமாக இருக்காது. வயிற்றில் நிறைய விஷயங்கள் இருப்பதால், பசி இருந்தாலும் ஒருவித மந்தமாகவும், சோம்பலாகவும் இருப்பார்கள். செயல்களில் ஆர்வம் இருக்காது. வயிற்றில் வீக்கம் (bloating) ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்த மூலம் (bleeding piles) குடலிறக்கம் (hernia) ஏற்படும். தலைவலி வர ஆரம்பிக்கும்.
இதுபோன்று, மலம் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளால் பல நோய்கள் வரும். மலம் கழிப்பதற்கு மாத்திரை பயன்படுத்தினால் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. அதனால் உணவிலேயே முடிந்தவரை இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். இந்த மாதிரி மலச்சிக்கல் பிரச்சினைகளை சாதாரணமாக எண்ணாமல், அதற்கான அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் செய்ய வேண்டும். மலச்சிக்கல் பிரச்னையை தீர்ப்பதற்கும், உடலை ஆரோக்கியமாவ வைத்துக்கொள்வதற்கும், இதை முயற்சித்துப் பாருங்கள். அப்படியும் சரிவரவில்லை என்றால், ஒரு மருத்துவ ஆலோசனை பெற நீங்கள் வரலாம்.
உங்கள் தினசரி வழக்கத்தில் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொண்டால் மலச்சிக்கலிலிருந்து விடுதலை பெறலாம் என்று கேட்டால், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். பழ வகைகளை அதிகம் சாப்பிடலாம். ட்ரை ஃப்ரூட் ஜூஸ் மற்றும் மாம்பழம் சாப்பிடலாம். சுடுநீர் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடலாம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகுத்தூள் போட்டு குடிப்பது மிகவும் நல்லது. இளநீர் குடிப்பது, நொங்கு சாப்பிடுவது, மோர் அருந்துவது, பப்பாளி சாப்பிடுவது, அருகம்புல் ஜூஸ் குடிப்பது போன்றவை நல்ல பலன் தரும்.
காப்பர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள், மற்றும் கீரைகள் அனைத்தையும் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளை உங்கள் தினசரி வழக்கத்தில் அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.