நடு இரவில் பல் வலியா? வீட்டிலேயே சரி செய்யலாம்; சீக்ரெட் பகிரும் டாக்டர் சந்தியா

பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். இப்படி பல்வலி ஏற்படும்போது, அதை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். இப்படி பல்வலி ஏற்படும்போது, அதை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
teeth

உடலில் எந்த வலி ஏற்பட்டாலும் அதனை பொறுத்துக்கொள்ளும் நாம் பல்வலி ஏற்பட்டால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத தான் இருக்கிறது. சாப்பிட முடியாத நிலை உருவாகும். பல்வலி வரும்போது சில பொதுவான அறிகுறிகள் தென்படும். கூச்சம், குறிப்பாக சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை சாப்பிடும்போது அதிக எரிச்சல், மெல்லும்போது அல்லது கடிக்கும்போது வலி, வீக்கம், தலைவலி அல்லது காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

Advertisment

சில சமயங்களில் வாயில் கெட்ட வாடை அல்லது கசப்பான சுவை கூட உணரப்படலாம். பல்வலி வந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். மருத்துவர் உங்கள் பற்களைப் பரிசோதித்து பார்த்துக்கொள்வது நல்லது. மருத்துவரை அணுகுவதற்கு முன், தற்காலிக நிவாரணம் பெற சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். இப்படி பல்வலி ஏற்படும்போது, அதை வீட்டிலேயே சரி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

இரவில் பல்வலி வந்தால் வீட்டில் லங்கம், இருந்தால் அதை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் வைத்தால், பல்வலி உடனடியாக சரியாகிவிடும். 2-3 நிமிடங்கள் கழித்து லவங்கம் நன்றாக ஊறியபின் அதனை கடித்து சாப்பிட்டுவிட வேண்டும். அடுத்து வீட்டில் லவங்க தைலம் இருந்தால், ஒரு துணியில் நனைத்து வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம். இப்படி செய்தால் 5 நிமிடங்களில் வலி குறைந்துவிடும். அடுத்து 2-3 லவங்கத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.

Advertisment
Advertisements

இவ்வாறு வாய் கொப்பளிக்கும்போது, பல்வலி குறைய வாய்ப்பு உள்ளது. அடுத்து, இரவு தூங்கும்போது தலைக்கு மற்றொரு தலையணையை அதிகம் வைத்து தலை மேலே இருப்பது போன்று தூங்க வேண்டும். தலை சரிசமமாக இருப்பது போன்று தூங்கினால் வலி அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு காலை எழுந்தவுடன், பல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: