சிறுநீரகங்களில் உருவாகும் திடமான தாதுக்கள் மற்றும் உப்புகளின் படிகங்கள் சிறுநீரக கற்கள் என்று சொல்வார்கள். இவை சிறுநீர்க் குழாய் வழியாக செல்லும்போது கடுமையான வலியை ஏற்படுத்தும். கடுமையான வலி, பொதுவாக முதுகின் கீழ் பகுதியில் அல்லது வயிற்றின் பக்கவாட்டில் தொடங்கி, இடுப்பு மற்றும் தொடை வரை பரவும். இந்த வலி விட்டு விட்டு வரலாம் அல்லது தொடர்ந்து இருக்கலாம்.
Advertisment
உடலில் போதுமான நீர் இல்லாவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அடர்த்தியாகி கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதிக உப்பு, புரதம் மற்றும் சில கனிமங்கள் கால்சியம், ஆக்சலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். சிறுநீரகக் குழாய் நோய்த்தொற்றுகள், ஹைப்பர்பாராதைராய்டிசம், கீல்வாதம் போன்ற சில மருத்துவ நிலைகள் சிறுநீரகக் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
சில வகையான சிறுநீர் போக்கு மருந்துகள் மற்றும் அமில எதிர்ப்பு மருந்துகள் கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். இந்த கிட்னி கல்லை எளிதாக கறைப்பதற்கு, வாழைத்தண்டு, முள்ளங்கி, வெண்பூசணி ஜூஸ் குடிக்கலாம். அதேபோல் சித்தாவில் நீர்முள்ளி கஷாயம், நெரிஞ்சில் முள் கஷாயம், குடிக்கும்போது கிட்னி கல் எளிதாக வெளியில் வந்துவிடும். கல் மிகவும் பெரிதாக இருக்கிறது என்றால், சிலா சத்து, நண்டுக்களி, காமினேஷனில் மோர் அல்லது இளநீரில் சேர்த்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு குடிக்கும்போது ஓரிரு நாட்களில் கல் தானாக வெளியில் வந்துவிடும். இந்த கல்லை சேமித்து வைத்து அது என்ன கல் என்று பார்க்க வேண்டும். கிட்னி கல் என்று டாக்டரிடம் சென்றால் நான்வெஜ் பால் எதையும் சாப்பிடாதே என்று சொல்வார்கள். ஆனால், இவற்றை விட்டுவிட்டு வெறும் சாப்பாடு மட்டும் சாப்பிட முடியாது. அதனால், அது என்ன கல் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது புரோட்டின் கல்லாக இருந்தால் புரோட்டின் உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.