பி.பி கண்ட்ரோல் பண்ண இனி டென்சன் வேணாம்... தங்க நிறத்துல இருக்கும் இந்த தண்ணீர் போதும்: டாக்டர் சிவராமன்
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, சிறுநீரைப் பெருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, சிறுநீரைப் பெருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ரத்த கொதிப்பு மற்றும் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்ன மாதிரியாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்? அவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்பது குறித்து டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, சிறுநீரைப் பெருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாகும்போது, அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அப்படியானால், என்ன சாப்பிடலாம், என்ன குடிக்கலாம் என்று பார்ப்போம்.
Advertisment
முதலில், இரத்த அழுத்த நோயாளிகள் தினசரி அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். எந்தத் தண்ணீர் குடிக்கலாம் என்று பார்த்தால், நன்றாகச் சுடவைத்து ஆறவைத்த நீரைக் குடித்தால் போதும். மிகவும் சூடாகக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதேபோல், மிகவும் குளிர்ச்சியான தண்ணீரும் நல்லது கிடையாது. எனவே, சுடவைத்து ஆறவைத்த, அறை வெப்பநிலையில் உள்ள நீரையே ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை குடிக்க வேண்டும். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் குடிக்கலாம்.
சீரகத் தண்ணீர் எப்படி செய்வது? சீரகத்தை (கேரளாவில் செய்வது போல) ஒரு வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் சீரகத்தை வறுத்துக்கொண்டு, இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, சீரகம் மிதக்கும் நேரத்தில் தண்ணீர் தங்க நிறத்தில் மாறும். அப்போது அதனை வடித்து எடுத்து, சாப்பிடும் நேரத்தில் அந்த சீரகத் தண்ணீரை அருந்தலாம். அவசரமாக தண்ணீரில் கலக்காமல், இரவு படுக்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது.
Advertisment
Advertisements
காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது நல்லதுதான் என்றாலும், மடமடவென அதிக அளவு குடிப்பது சிலருக்கு, குறிப்பாக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நல்லதல்ல. உங்கள் சிறுநீரகம் எந்தளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, தண்ணீர் குடிக்கும் அளவை சரிசெய்து கொள்ளலாம். அடுத்ததாக, காபி மற்றும் டீ அதிகமாகக் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதைக் குறைப்பது நல்லது.
ஏனெனில், இவை இரண்டிலுமே காஃபின் சத்து உள்ளது. இந்த காஃபின் சத்து, ரத்தக் குழாய்களை (vascular) மிகவும் இறுக்கமாக வைத்திருக்கும். காபி குடித்தவுடன் உற்சாகமாக உணர்ந்தாலும், நீண்ட காலப் பயன்பாட்டில் இது ரத்தக் குழாய்களைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அளவோடு எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது என டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.