கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் நிலையை, ஈரல் கொழுப்பு அல்லது கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver Disease) என்று சொல்வார்கள். கல்லீரலில் சிறிதளவு கொழுப்பு இருப்பது இயல்பானது, ஆனால் அதன் எடைக்கு மேல் 5% முதல் 10% வரை அதிகமாக கொழுப்பு சேர்ந்தால் அது கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது மது அருந்தாத அல்லது மிகக் குறைவாக மது அருந்துபவர்களிடம் காணப்படுகிறது.
இந்த கல்லீரல் கொழுப்பு நோயை 2 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது: கல்லீரலில் கொழுப்பு மட்டுமே இருக்கும், வீக்கம் அல்லது கல்லீரல் சேதம் இருக்காது. இது பொதுவாக தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால், கல்லீரலில் கொழுப்போடு வீக்கமும், கல்லீரல் செல்களுக்கு சேதமும் ஏற்படும். இது கல்லீரல் ஃபைப்ரோஸிஸ் மற்றும் கல்லீரல் சுருக்கம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படுகிறது.
இது ஆல்கஹாலிக் ஸ்டீட்டோஹெபடைடிஸ் மற்றும் சிரோசிஸ் போன்ற கடுமையான நிலைகளுக்கு முன்னேறலாம். இந்த கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து விடுபடுவதற்கும், வராமல் தடுப்பதற்கும், என்ன தீர்வு என்பது குறித்து, டாக்டர் யோக வித்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ள வீடியோவில், ஈரலில் உள்ள கொழுப்பை குறைக்க, கீழா நெல்லி முக்கிய தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
எந்த ஒரு காமலை நோய் வந்தாலும் கீழாநெல்லிலைய அரைத்து குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோலத்தான் கீழாநெல்லி வேர் முதல் நுனிவரை நன்றாக கழுவிட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து சாறு எடுத்து, 30-60 எம்.எல்.வரை 48 நாட்கள் தினசரி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இதை குடித்துவிட்டு மோர் குடித்து வந்தால், ஈரலில், நல்ல மாற்றம் தெரியும். ரத்தம் சுத்தமாகும், சோர்வான தன்மையை போக்கும், முகமும் பொலிவடையும். சர்க்கரை நோயும் கட்டப்பாட்டுக்குள் வரும்.
குறிப்பாக டைப் 2 சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கீழாநெல்லி முக்கிய நன்மைகளை கொடுக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் என்று டாக்டர் யோகவித்யா கூறியுள்ளார்.