உடல் பருமனாக உள்ள ஆண் பெண் இருவருமே தங்கள் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க, பல வழிகளில் முயற்சி செய்வார்கள். மேற்கொண்டு அனைத்து முயற்சிகளும் பலன் கொடுக்கவில்லையா? அப்போ இந்த முறையை ட்ரை பண்ணுங்க.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பெண்கள், நடுத்தர வயதினர் என பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் உழைப்பு இல்லாதது, எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உள்ளிட்ட பிரச்னைகளால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடும். தொப்பை விழும். குறிப்பாக பெண்களுக்கு பிரசவம் முடிந்தவுடன் ஏற்படும் உடல்நிலை மாற்றத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகும்.
இந்த மாதிரி உடல் உடை அதிகரிப்பு, கொழுப்பு அதிகரிப்பு காரணமாக உடலில் பாதிப்பு ஏற்படுவதால், இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் இந்த கொழுப்புகளை குறைப்பதற்கு, எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஒரு தண்ணீர் தயார் செய்து குடித்தால் விரைவில உடல் எடை மற்றும் உடலில் இருந்து கெட்ட கொழுப்புகளை குறைக்கலாம் என்று டாக்டர் நித்யா அட்வைஸ் கூறியுள்ளார்.
கொள்ளு கசாயம்
Advertisment
Advertisement
உடல் எடையை குறைக்க, கெட்ட கொழுப்புகளில் இருந்து விடுபட, கொள்ளு கசாயம் பெரிய உதவியாக இருக்கும். முந்தைய நாள் இரவில் கொள்ளு ஊற வைத்து மறுநாள் அதை வேகவைக்க வேண்டும். வேக வைக்கும்போது அதில், லவங்கப்பட்டை, சோம்பு(ஒரு ஸ்பூன்), சின்ன வெங்காயம் (4-5) பூண்டு (4-5), இவை அனைத்தையும் சேர்த்து கொள்ளு வேக வைக்க வேண்டும்.
கொள்ளு நன்றாக வெந்து குழைந்து வரும்போது. அதை வடிகட்டி அதன் நீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை தினமும் காலையில் குடிக்க வேண்டும். அதேபோல் வேகவைத்த அந்த கொள்ளுவை, பூண்டுடன் சேர்த்து சாப்பிடலாம். உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் தன்மை கொண்ட கொள்ளு வேக வைத்த நீரை குடிக்கும்போது உடலில் கொழுப்பு அதிகம் உள்ள பகுதிகளில், கொழுப்பை கரைய வைக்கும். இதயத்தில் அடைப்பு இருந்தாலும் அதனை கரைக்க பயன்படும். இந்த நீரை குடித்தால் ஒரே வாரத்தில் கொழுப்பு குறையும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“