மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பீர்க்கங்காய் தோல் துவையல் ஒரு சிறந்த தீர்வாகும். பீர்க்கங்காய் தோலை மட்டும் தனியாக எடுத்து சட்னியாகவோ துவையலாகவோ செய்து சாப்பிடும்போது, மலச்சிக்கல் முற்றிலுமாக நீங்கிவிடுவதைக் காணலாம். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், பீர்க்கங்காய் தோலை எடுத்து நன்கு வதக்கி சட்னி செய்து கொடுங்கள்.
இதை இரவு உணவுடனோ, காலை உணவுடனோ அல்லது மதிய உணவுடனோ வாரத்திற்கு இரண்டு நாட்கள் துவையலாகவோ, சட்னியாகவோ கொடுக்கலாம். இப்படிச் செய்வதால், அவர்களின் மலச்சிக்கல் படிப்படியாகக் குறைந்து, காலையில் எழுந்தவுடன் உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி, உடல் ஆரோக்கியமடைவதை நீங்களே பார்க்கலாம்.
பீர்க்கங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய்
வெங்காயம்
மிளகாய்
பூண்டு
புளி (சிறிது)
தேங்காய் (சிறிது, துருவியது)
உப்பு
எண்ணெய்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:
பீர்க்கங்காயை நன்கு கழுவி, தோலுடன் அல்லது தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதே கடாயில் பீர்க்கங்காயையும் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பீர்க்கங்காயில் உள்ள நீர் வற்றி நன்கு வதங்கியதும், அடுப்பை அணைக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும், அதனுடன் தேங்காய், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் விடாமல் அல்லது கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். ஒரு சிறு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த துவையலில் சேர்க்கவும். அவ்வளவு தான் பீர்க்கங்காய் சட்னி ரெடி.