சாதாரண கீரைகளை விட இதில் 40 மடங்கு ஊட்டச் சத்து: சத்குரு
தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் கீரைகளை, தவறிவிட கூடாது.
தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் கீரைகளை, தவறிவிட கூடாது.
உடல ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு அவசியம். அதேபோல் ஆரோக்கியமான உடல் அமைப்புடன் பலவகையான விஷயங்களை பார்த்து ரசிக்க கண்கள் மிக மிக அவசியம். கண்களை பாதுகாக்கவும், கண்பார்வையை அதிகரிக்கவும், இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை பயன்படுத்தி சத்துக்களை பெறலாம். அந்த வகையில் கீரைகள் உடலில் ஏற்படும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
Advertisment
தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இரும்புச்சத்து உட்பட உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் கீரைகளை, உணவில் சேர்த்துக்கொள்ள தவறிவிட கூடாது. ஒவ்வொரு கீரையும் நமக்கு பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. பெரும்பாலும் கீரைகள் நமக்கு சாதாரணமாக கடைகளில் கிடைக்கும். அப்படி இல்லை என்றால் நாம் வீட்டிலேயே வளர்க்கவும் செய்யலாம்.
அதே சமயம் சாதாரண கீரைகளில் கிடைக்கும் சத்துக்களை விட இந்த கீரையில் 40 மடங்கு அதிக சத்துக்கள் இருக்கிறது. அந்த கீரை தான் முளைக்கட்டிய அருகுலா கீரை. கொழுந்து கீரை என்று அழைக்கப்படும் இதில், ஆண்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது. இந்த சத்துக்கள் அணைத்தும் சாதாரண கீரைகளை விட, முளைக்கட்டிய அருகுலா கீரையில் 40 மடங்கு அதிகமாக இருக்கிறது. புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்ட இந்த கீரை கண் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.
Advertisment
Advertisements
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த கீரை கல்லீரல் சேதமடையாமல் பாதுகாக்கிறது என்று சத்குரு தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.