நீரிழிவு நோயாளிகள் இனிப்பு தொடர்பான உணவுகள் பழங்கள் ஆகியவற்றை சாப்பிட கூடாது என்று சொல்வார்கள். ஆனால், அவர்கள் சாப்பிட வேண்டிய முக்கியமான 5 பழங்கள் குறித்து டாக்டர் அருண் கார்த்திக் பட்டியலிட்டுள்ளார்.
Advertisment
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ, அல்லது அதிகரித்தாலே இரண்டுமே நீரிழிவு நோய் தான்.
இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, பல மருத்துவமுறைகள், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டியது அவசியம். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இனிப்பு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது. குறிப்பாக, சப்போட்டா மற்றும் மாம்பழம சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெல்லிக்காய், பப்பாளி உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
அதேபோல் கிழங்கு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கிழங்குகள் சாப்பிட வேண்டும் என்றால், பனங்கிழங்கு மற்றும் முடவாட்டுக்கால் கிழங்கை சாப்பிடலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய 5 பழங்களை டாக்டர் அருண் கார்த்திக் பட்டியலிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
ஆப்பிள் சாப்பிடலாம் என்று கூறியுள்ளார். இதில் நார்ச்சத்து அதிகம் கலோரிகள் மிகவும் குறைவு. காலையில் 11 மணிக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் 3-4 மணி நேரம் பசி இருக்காது. அடுத்து ஆரஞ்சு பழம். குறைவான கலோரி ஃபைபர் அதிகம் உள்ளது. இதில் இருக்கும் பெட்டின் என்ற காம்போனண்ட், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். அடுத்து ஸ்ட்ராபரி. இந்த பழத்தை எவ்வளவு சாப்பிட்டாலும் சுகர் அதிகமாகாது. அந்த அளவிற்கு குறைவாக கலோரிகள் தான் இருக்கிறது.
அடுத்த நாவல் பழம். குறைவான கலோரிகள் இருக்கும் இதில் சுகரை குறைக்கும் தன்மை அதிகம். அடுத்து கொய்யா பழம். அதிகவமாக வைட்டமின் சி, அதிகமாப ஃபைபர், இருக்கிறது. 2-3 கொய்யா பழம் சாப்பிட்டாலும் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்,