பண்டிகை நாட்களில் நமது வீட்டில் எல்லாம் பலகாரம் செய்வது வழக்கமான நடைபெறும் ஒரு நிகழ்வு. இந்த நாட்களில் செய்யப்படும் குலாப் ஜாமூன், லட்டு, ரவா லட்டு உள்ளிட்ட இனிப்பு பலகாரங்களை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதே சமயம் இவற்றை செய்யும்போது பக்குவமாக செய்வது மிகவும் முக்கியம்.
அந்த வகையில் பலகாரங்களை செய்யும்போது அவற்றை பக்குவமாக செய்ய முத்தான 10 வழிகளை பார்ப்போமா?
இனிப்பு பலகாரங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் குலாப் ஜாமூன்க்கு முக்கிய இடம் உண்டு. இதில் குலாப் ஜாமூன் உருண்டையை எண்ணெயில் பொறித்து எடுத்தவுடன் சூடான சர்க்கரை பாகிற்கு பதிலாக ஆறிய சர்க்கரை பாகில் போட்டு வைக்க வேணடும். அப்போதான் உருண்டை விரிசல் இல்லாமல் குண்டு குண்டாக வரும்.
ரவா லட்டு செய்யும்போது முக்கியமாக இந்த வழியை ஃபாலோ பண்ணுங்க. சிறிதளவு அவலை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் சிறிது பால்பவுடர் சேர்த்து ரவா லட்டு பிடிக்கும்போது சேர்த்தால் ரவா லட்டு மிகவும் சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்களேன்.
சிறிதளவு கோதுமை மாவுடன் சேர்த்து ஆப்பத்தை சுட்டு வைத்தால் சீக்கிரம் காய்ந்துபோகாமல் சுவையுடன் சாஃட்டாக இருக்கும். அதேபோல் கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி அரைக்கும்போது புளிக்கு பதிலாக சிறிதளர் ஆம்சூர் பவுடர் (மாங்காய் தூள்) சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவை கிடைக்கும். இதில் மாங்காய் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
சேமியாவை வறுத்து தயிரில் ஊறவைத்து ரவா இட்லி மாவுடன் சேர்த்து செய்தால் இட்லி ரொம்ப டேஸ்டாக இருக்கும். அதேபோல், கீரையில் துவரம்பருப்புக்கு பதிலாக பாசிபருப்பு சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
கோதுமை மாவு சளிக்கும்போது கிடைக்கும் தவிட்டை தயிரில் ஊறவைத்து உடம்பில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியாகும். சூட்டு கொப்புளங்கள் வராது. அதேபோல் சப்பாத்தி மாவு பிசையும்போது அதில் ஏலக்காய் பொடி சேர்த்தால் சப்பாத்தி மனமாகவும் இருக்கும் அதேசமயம் எளிதில் ஜீரணமாகும்.
நீர்த்துபோன பாயாசத்தில் நன்றாக குழைத்த வாழைப்பழம் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்தால் பாயாசம் கெட்டியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil