மனித உடல் நாள் தோறும் பல்வேறு வகையான நோய்களை எதிர்த்து போராடி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்கள் இந்த நோயில் தாக்கம் இல்லாமல் தப்பித்துக்கொண்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அதே சமயம் வயது முதிர்வு காரணமாகவும் சில நோய் தாக்கங்கள் இருக்கும். அந்த வகையில் குறிப்பிடத்தக்க ஒரு பிரச்னை தான் மூட்டுவலி.
பொதுவாக வயதானவர்களுக்கு தான் மூட்டுவலி வரும் எலும்பில் ஏற்படும் தோய்மானம் காரணமாக இது வரலாம் என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கடந்த காலங்களில் வாழ்ந்த நம் முன்னோர்கள், ஆரோக்கியமான உணவை உட்கொண்டதால், அவர்கள் வயொதிகத்தில் இந்த மூட்டுவலி பிரச்னையை சந்தித்தார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டம் ஃபார்ஸ்ட் புட் காலம் என்பதால், இளைஞர்கள் பலரும் இப்போது இந்த பிரச்னையுடன் இருக்கிறார்கள்.
குறிப்பாக பல பெண்கள் 30-32 வயதிலேயே மூட்டுவலி, இடுப்பு வலி, உள்ளிட்ட பிரச்னைகளை சாதாரணமாக சந்தித்து வருகின்றனர். இந்த மூட்டுவலி பல்வேறு காரணங்களால் வருகிறது. இது என்ன என்று தெரிந்துகொண்டு அதற்கான உணவு மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதிகமான புளிப்பு உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் வயோதிகத்தில் இந்த மாதிரியான மூட்டுவலி பிரச்னைகளை சந்திப்பதாக டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
வயதுக்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் அதிகமாக இருப்பது, உடல் உழைப்பு இல்லாதது, அமர்ந்தபடி வேலை பார்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை செய்பவர்கள் மூட்டுவலிகளை சந்தித்து வருகிறார்கள். இப்படி மூட்டு வலியை சந்திப்பவர்கள் உணவில் புளியை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதேபோல் மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய உருளை, கேரட்,உள்ளிட்ட கிழங்கு வகைகளை மூட்டுவலி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஐஸ் வாட்டர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது.
உணவில் நிறைய நார்பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகள் குறையும். வாத தன்மை குறையும். வெந்தயம், கீரைகள் ஆகிய உணவு பொருட்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்வது மூட்டுவலிக்கு மிகவும் நல்லது. அதேபோல் சக்ரவர்த்தி கீரை, வாயுவை வெளியேற்றி மூட்டுவலியை குறைக்கக்கூடிய கீரைகள். இந்த கீரைகளை தினசரி உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “